பாதுகாப்புக் குற்ற(சிறப்பு நடவடிக்கை)ச் சட்டம் (சோஸ்மா) தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டு வரும் வேளையில் அச்சட்டம் தேவையானதுதான் என்று தற்காத்துப் பேசிய முன்னாள் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேல் அது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அதில் பல காப்புகள் உண்டு என்றும் கூறினார்.
சோஸ்மா வழங்கும் சிறப்பு அதிகாரம், 2012-இல் லாஹாட் டத்து ஊடுருவலின்போது தீவிரவாதிகளை ஒடுக்க மிகவும் பயனாக இருந்தது என கனி கூறினார்.
சட்டங்கள் நல்லவையாக இருந்தாலும் அமலாக்கப்படும் விதத்திலும் அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்திலும் பிரச்னைகள் எழலாம் என்றாரவர்.
அம்னோ தொகுதி ஒன்றின் முன்னாள் தலைவர் கைருடின் அபு ஹாசனும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் சோஸ்மாவின் கீழ் கைது செய்யப்பட்டதா சரியா என்று வினவியதற்கு அவ்வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால் அதைப் பற்றிக் கருத்துரைக்க கனி மறுத்தார்.
“சட்டங்கள் நல்லவையாக இருந்தாலும் அமலாக்கப்படும் விதத்திலும் அர்த்தப்படுத்திக்கொள்ளும் விதத்திலும் பிரச்னைகள் எழலாம்” அப்படியானால் அமலாக்கப்படும் விதம் சரியில்லாததால் நாட்டில் கட்டுக்கடங்கா “கள்ளகுடியேறிகள் குடியேற்றம்” என்று அர்த்தம் கொள்ளலாமா ?