போலீஸ் காவலில் இருந்த சைட் முகம்மட் அஸ்லானின் இறப்புமீதான விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது.
விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும் என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார்.
“அமலாக்க நிறுவன நேர்மைகாப்பு ஆணையத்தின் அறிக்கை இறந்துபோன சைட் முகம்மட் அஸ்லான் போலீஸ் காவலில் இருந்தபோது உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று கூறுவதை போலீஸ் ஏற்றுக்கொள்கிறது”, என காலிட் நேற்றிரவு கூறினார்.
சம்பந்தப்பட்டவர்கள் நீதிமுன் நிறுத்தப்படுவார்கள் என்றவர் உறுதி கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 25-இல், அக்கைதியின் இறப்பைத் திடீர் மரணம் என்று ஜோகூர் போலீஸ் வருணித்திருந்தது.
விசாரணை பல வருடங்களுக்கு நடைபெறும் — பிறகு யாருக்கும் நினைவிருக்காது
விசாரணை முடியும் தருவாயில் உள்ளது! பயப்படத் தேவை இல்லை!விசாரணைக் கோரியவர்கள் அவர்களும் ‘விசா’ வாங்கிக்கொண்டு போய் சேர்ந்து விடுவார்கள்!
தடுப்புக்காவலில் இருந்தபோது மரணமுற்ற தமிழனுக்கு விசாரணை இல்லையா?
ஐ
புது கதை
புது படம்