வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பம் தீரவில்லை; நமக்குச் சம்பள உயர்வா? பாஸ் பிரதிநிதி குமுறல்

husamகிளந்தானில்  கடந்த  ஆண்டு  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர் இன்னமும்  துன்பப்பட்டுக்  கொண்டிருக்கும்போது  சட்டமன்ற  உறுப்பினர்கள்  ஆட்சிக்குழுவினர்  ஆகியோரின்  சம்பளம்  உயர்த்தப்பட்டிருப்பதை  சாலோர்  சட்டமன்ற  உறுப்பினர்  ஹுசாம்  மூசா  கண்டித்தார்.

மாநிலச்  சட்டமன்றம்  திங்கள்கிழமை   சட்டமன்ற  உறுப்பினர்களின்  சம்பளத்தை  ரிம4,600-இலிருந்து  ரிம8,000 ஆக  உயர்த்து  சட்டதிருத்தம்  ஒன்றை  ஏற்றுக்கொண்டது.

அதன்படி  மந்திரி  புசார்,  துணை  மந்திரி  புசார்,  சட்டமன்றத்  தலைவர்,  துணைத்  தலைவர்,  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்  ஆகியோரின்  சம்பளமும்  ரிம6,000- இலிருந்து  ரிம 10,000  ஆக  உயர்கிறது.

யயாசான்  இஸ்லாம்  கிளந்தானின்  ஆசிரியர்களுக்கு  மாநில  அரசு  ரிம14.6 மில்லியன்  கடன்பட்டுள்ள  வேளையில் சம்பள உயர்வு  கொடுக்கப்பட்டிருப்பது நல்லதல்ல  என்றாரவர்.

இப்பணம்  ஆசிரியரிகளின்  சம்பளத்திலிருந்து  ஊழியர்  சேமநிதி,  தாபோங் ஹாஜி  முதலியவற்றுக்காக பிடித்தம்  செய்யப்பட்ட  தொகையாகும்.

“மக்களுக்குத்தான்  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களுக்குப்  புதிய  சம்பளத்தைக்  கொடுப்பதற்குமுன்  (ஆசிரியர்களுக்கு)  கொடுக்க  வேண்டியதை  உடனடியாகக்  கொடுக்க  வேண்டும்.

“வெள்ளத்தின்போது  வீடுகளை  இழந்த  மக்களின்  நிலை  என்ன?  புதிய  வீடுகளுக்காக  அவர்கள்  பல  மாதங்கள்  காத்திருக்கும்  வேளையில்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  சம்பள  உயர்வு  பெறுவதைக்  கண்டு  தாங்கள்  அலட்சியப்படுத்தப்படுவதாக  நினைக்க  மாட்டார்களா?”, என  ஹுசாம்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.