அருள்: ரபிஸியை மதிக்கிறேன் ஆனால், மக்களவைத் தலைவரின் முடிவே இறுதியானது

respect1எம்டிபி  தலைவர்  அருள்  கந்தா  கந்தசாமி, டிஏபி-இன்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவாவுக்குப்  பதில்  பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸியுடன்  விவாதத்தில்  கலந்துகொள்ள  தம்மால்  இயலாது  என்று  கூறியுள்ளார்.

மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின் மூலியாவின்  சொல்லுக்கு மதிப்பளித்து  அருள்  அவ்வாறு  முடிவு  செய்திருக்கிறார். 1எம்டிபி  மீதான  எந்த  விவாதமும்  1எம்டிபி  மீதான  பொது  கணக்குக்குழுவின்  விசாரணைக்குப்  பின்னர்தான்  நடக்க  வேண்டும்  என  பண்டிகார்  நிபந்தனை இட்டிருப்பதை  அவர்  சுட்டிக்காட்டினார்.

“ரபிஸியை  மதிக்கிறேன். அவர்  தகுதியான  எதிரி. நன்கு  வாதம்  செய்யக்கூடியவர், நல்ல  பேச்சாளர், கண்ணியவான். இளம்  வயதில்  அவருடன்  நிறையவே  வாதமிட்டிருக்கிறேன்.

“ஆனால்,  நாடாளுமன்ற  விவகாரங்களில் முடிவெடுக்கும்  அதிகாரம்  மக்களவைத்  தலைவருக்குத்தான்  உண்டு.

“பிஏசி  சாட்சி  என்ற  முறையில்  என்னுடைய  பொறுப்பை  அவர் வரையறுத்துக்  கூறிவிட்டார். எனவே,  விவாதம்  நடப்பதாக  இருந்தால்  பிஏசி  விசாரணைக்குப் பிறகே  நடக்க  வேண்டும்”, என  அருள்  கந்தா  ஓர்  அறிக்கையில்  கூறினார்.