“டிபிபி மாற்றப்பட்டார்” என்ற செய்திக்காக மலேசியாகினியிடம் போலீஸ் மற்றும் எம்சிஎம்சி விசாரணை

 

 ஒரு துணை விசாரணையாளர் (டிபிபி) மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டார் என்ற செய்தியை வெளியிட்டதற்காக மலேசியாகினி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மாலை மணி 5.00 அளவில் போலீஸ் மற்றும் எம்சிஎம்சியிலிருந்து 10 அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மலேசியாகினி அலுவலகத்திற்கு வந்து விசாரனையைத் தொடங்கினர்.

முன்னதாக, எம்சிஎம்சி மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானிடமும் இச்செய்தி சம்பந்தப்பட்ட செய்தியாளரிடமும் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அச்செய்தி குறித்து அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

தொடக்கத்தில், அஹமட் ஷாஸாலி அப்துல் கைரி எம்சிஎம்சியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டார் என்பதைச் சட்டத்துறை தலைவர் முகமட் அப்பாண்டி மறுத்தார்.

மலேசியாகினியின் செய்தியில் அந்த அதிகாரி எம்சிஎம்சியிலிருந்து மாற்றப்பட்டார் என்று எதுவும் கூறப்படவில்லை.

கடந்த புதன்கிழமை நடப்பு சட்டத்துறை அமைச்சர் நான்சி ஷுக்கிரி அந்த டிபிபி  அந்த அமைப்புக்குள்ளேயே மாற்றம் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர் அந்த அதிகாரிகள் அங்கிருந்து இரவு மணி 8.00 அளவில் புறப்பட்டனர். அப்போது அவர்கள் ஒரு மடிக்கணியையும் கைப்பற்றிச் சென்றனர்.