இந்நாட்டு இந்தியர்கள் “வந்தேறிகள்” அல்லர். ஆகவே, மஇகா சாதி அரசியல் நடத்தக்கூடாது. அது இந்தியாவில் பரவலாக இருக்கிறது என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார்.
மஇகா அரசியலில் இந்நாட்டிலுள்ள இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அடங்கியிருக்க வேண்டும் என்று கூறிய நஜிப், “மலேசியாவிலுள்ள இந்தியச் சமூகம் நாட்டிற்கு மிக முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்”, என்றார்.
“நான் மலேசியா அதன் சிகரத்தில் இருக்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருக்கிறேன். அந்த மேம்பாட்டின் அங்கமாக இந்தியர்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நமக்கு வலிமை இருப்பதால் நாம் அந்தப் பெரும் மாற்றத்தைச் செய்ய முடியும்”, என்று நஜிப் மஇகாவின் 67 ஆவது பேராளர் மாநாட்டை இன்று கோலாலம்பூரில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது கூறினார்.
மஇகா ஒரு நல்ல மற்றும் நியாயமான கட்சி என்பதை அது நிரூபிக்க வேண்டும். கட்சி தேர்தலில் தோற்றவர்களை ஒதுக்கிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
“நமது பக்கம் அல்லது “சாதியில்” இல்லாதவர்களை நிராகரித்து விட வேண்டாம். நடந்ததை ஏற்றுக்கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்கிறேன்”, என்று பிரதமர் நஜிப் மேலும் கூறினார்.
என்ன சாதியா! அப்படியெல்லாம் எங்கள் கட்சியில் ஒண்ணுமில்ல சும்மா முக்குலத்தோர் என்றும் கவுண்டர் என்றும் சொல்லிக் கொள்ளவோம். அவ்வளவுதான்!
இதே செம்பருத்தியில் தமிழரிடையே சாதியம் வேண்டாம் என்று சொன்ன பொழுது, சிலர் நேரிடையாக எதிர்த்தனர், இன்னும் சிலர் மறைமுகமாக எதிர்த்தனர். இந்நாட்டு பிரதமர், இண்டியன்களை , மலையாளி, தெலுங்கர், தமிழர் என்று பிரித்தால வழிவகுத்தவர், வேற்றொரு இனத்தவர். அவர் சொல்லுகின்றார், இண்டியன்கள் சாதியை பின்பற்றாதீர்கள் என்று. வெட்கமில்லை இந்த சமூகத்திற்கு! வெட்கமில்லை ம.இ.க. தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும்! சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள் என்றால் நாண்டுகிட்டு சாவுங்கடா.
அண்ணன் தேனீ அருமையான கருத்து . நாம் இருப்பதோ நாலு பேர் ஆனால் 40 சாதிகள். எங்கே ஒற்றுமை. அதுவும் தமிழன் என்று சொன்னால் நேராகவோ மறைமுகமாகவோ இக்கேள்வி வருகிறது. இதையே செருப்பால் அடிப்பது போல் சீமான் பேசியுள்ளார்.
நண்பர் தேனீ சரியாக சொல்லி விட்டிர்கள் வாழ்த்துக்கள்…!
ஜிப்பு சொல்வதெல்லாம் மடபத்தை விட்டு வெளியேறியதும் பறந்துவிடும். முக்கியமாக நாம் வந்தேறிகள் அல்ல எனும் கருத்து உடுசானின் தலைப்பு செய்தியாக வந்தால் சொல்லுங்கள்.
சாதியம் வேண்டாம் என்று சொல்லும் நஜிப் தானே மலையாளி, தெலுங்கன் என்று பிரித்து வைத்தார்? மற்றபடி தமிழர்களிடையே உள்ள சாதிப்பிரச்சனையை ஒழித்தவர்கள் நமது திராவிடக் கழகத்தினர். இதில் ஏதும் மாற்றுக் கருத்து தேவை இல்லை!
அய்யா தேனி உங்களுடைய கருத்து மறுக்கமுடியாத உண்மை .
ஜாதிகள் இல்லையடி பாப்பா !! என்று எங்கள் பாட்டன் பாரதி சொன்னதையே கேட்காத ஈன ஜாதி நாங்கள், நீர் சொன்னதையா கேட்க போகிறோம் !! மலையாளி !! தெலுங்கர் !! யாழ்ப்பாணத்தான் !! என்று நீர் சங்கம் வைத்து கொண்டு அவரை ஏனையா குறை சொல்கிறீர் !!.
திராவிடர்கள் சாதியத்தை ஒழித்தார்களா? அடக் கடவுளே! சாதியம் இல்லை, சாதியம் இல்லை என்று சாதியத்திற்கு சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்த பெருமை அவர்களைத்தான் சாரும்.
மலாய்காரன் சாதி வேண்டாம், என சொல்லி கேட்க வெட்கம் சூடு சொரணை இல்லையா நமக்கு ?………………………
குறள் 377
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்.
வாழ்க நாராயண நாமம்.
அதென்ன MCA பொது பேரவையில் “சீனர்கள் வந்தேறிகள் அல்லர்”,
MIC பொது பேரவையில் “இந்தியர்கள் வந்தேறிகள் அல்லர்” ஆனால் UMNO பொது பேரவையில் ” மலாய்க்காரர் வந்தேறிகள் அல்லர்” என்று கூற தயங்குவது ஏன் ? இப்படி பேசியே சீனர்களையும் இந்தியர்களையும் “வந்தேறிகள்” என்று நீங்கள்தான் நினவு படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள்.
இனிமேலாவது “வந்தேறிகள்” என்று நினைவு படுத்துவதற்கு பதிலாக அனைவரும் “மலேசியர்கள்” என்று கூற முயலுங்கள்.
நாடு சுதந்திரம் அடைந்து அரை நூற்றாண்டுகள் கடந்தும் “மலாய்க்காரர், சீனர், இந்தியர்” என்று இனரீதியான அரசியலை கையாளுபவர்கள் மஇகாவில் “சாதி” அரசியல் இருக்கக்கூடாது என்று கூறுவதற்கு அருகதையற்றவர்கள்.
பிரதமர் மட்டுமே இப்படி கூறுகிறார், ஆனால் அரசு அதிகாரிகள் அப்படி யோசிக்கவில்லை. மஇகா, மசீச பிரதமரிடம் இந்த அதிகாரியை பதவி நீக்கம் செய்ய சொல்ல வேண்டும் அப்போதுதான் இன ஒற்றுமையை பாதிக்கும் கருத்துக்காளை யாரும் அரசு அதிகாரிகள் கூறமாட்டார்கள். அதோடு பிரதமர் தலமை இயங்கும் அம்னோ உறுப்பினர்களுக்கும் பாட நடத்த சொல்லவும்
‘Pendatang’ term is just based on historical fact, BTN says – See more at: http://m.themalaymailonline.com/malaysia/article/pendatang-term-is-just-based-on-historical-fact-btn-says#sthash.XdXCOrFb.dpuf
இரண்டு முறை ம இ க மானட்டில் நஜிப் சதியை பற்றி பேசி இந்தியர்களை அவமானம் செய்து விட்டு சந்தோசமாக போகிறார்.இதற்க்கு எல்லாம் காரணம் பதவிக்கு அடித்து கொள்ளும் ம இ க உறுப்பினர்களே .இந்த மடயன்களினால் நமது சமுதயுதுக்கு பெரிதும் அவமானம். ம இ கவில் 698 படித்த தலைவர்கள் செய்த நல்ல காரியம் என்னவென்றால் பிளாட்ச்சர் தமிழ் பள்ளியில் படித்து அந்த பள்ளிக்கு கொடுத்த பொது மண்டபம் கட்டுவதற்கு RM50000 வாக்குறிதியை எமட்ரியா சரவணன் தோல்வி கண்டது .
.
Biro பாட்டி நெகரா: “வந்தேறிகள்” என்று சொல்வதில் தப்பில்லையாம்! பிரதமருக்கே ஆப்பு வைக்கின்ற ஒருவர் அந்த ‘பீரோ’வுக்குத் தலைவர்!. இப்பொழுதெல்லாம் பிரதமர் சொல்வதை யாரும் கேட்பதும் இல்லை. மதிப்பதும் இல்லை. பாவம் இந்த பல்லில்லா பிரதமர்.
இந்திய சமுதாயத்தில் எந்த கட்சியாக இருந்தாலும் தலைமைக்கு வருபவர்கள் சாதி உணர்வு அற்றவராக சமூக உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும் .அது இல்லாததால் தமிழினம் பிரிந்து தன வலிமை இழந்து கிடக்கிறது .எங்கு நோக்கினும் கூலிக்கு மாரடிப்பவனாகவே இருக்கிறான்
எல்லாம் வெளி வேஷம். நேரத்திற்கு நேரம் இடத்திற்கு இடம் பேசும் சமய சந்தர்ப்பவாதி -இவனுக்கும் இவனின் அம்னோ ஜென்மங்களுக்கும் இந்தியர்கள் ஒற்றுமையுடன் இருப்பது பிடிக்காது– குழம்பிய குட்டையில் தானே மீன் பிடிக்க முடியும்.
MIC பொது பேரவையில் நஜிப் தமிழில் “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என வினவினார். ஆளும் கட்சி தோற்றால் எதிர்கட்சிகள் ஜெயிக்கும் என்பது கூட தெரியாதா ? ஊழல் நன்கொடை நாயகனே !
பிரதமா நஜிபே இந்த அறிவுரையை உங்கள் அம்னோ உறுப்பினர் மற்றும் அரசு ஊழியர்களிடம் சொல்லுங்கள் தமிழர்கள் வந்தேறிகள் அல்ல என்று.வாக்குக்கு மட்டும் வேஷம் போடாமல் உண்மையான அணைத்து மக்களுக்கும் தலைவனாக செயல்படுங்கள்.
வந்தேறிகள் என்று கூறும்போது இந்தியாவை இன்று ஆளுபவர்களும் [ஆரியர்கள் ],அமெரிக்கா ,ஆஸ்திரேலியா ,சிங்கபூர் ,நியூ Zealand Tibet , ஆகிய நாடுகளை ஆள்பவர்களும் வந்தேறிகளே .
ஏன் ஹிந்துக்கள் வந்தேறிகள் அல்ல?,சரியான காரணம் வுண்டா?,சாசனத்தில் குறிக்க முடியுமா?பிறகு ஏன் பூமிபுத்ரா?,.
வாழ்க நாராயண நாமம்.
iraama thanneermalai இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ,சிங்கப்பூர் ,நியூசிலாந்து, திபெத் ஆகிய நாடுகளை குறிப்பிட்ட நீங்கள் தற்பொழுது “மலேசியாவை” ஆள்பவர்களும் “வந்தேறிகளே” என்பதை குறிப்பிட மறந்தது ஏனோ ? .
“வந்தேறிகள்” என்று கூறுவதை பற்றி ஒரு பெரியவரின் ஆதங்கம் :
அன்று துன் சம்பந்தன் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியர்களை “நாம் கூலி தொழிலாளர்களாக அழைத்து வர பட்டோம்” என்பதை நினவு படுத்த தவற மாட்டார் ; ஆனால் இன்றோ சுருக்கமாக “வந்தேறிகள்” என்று நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நினவு படுத்தி கொண்டிருக்கிறார்கள்.