டிஏபி கிராமப்புறங்களில் 1எம்டிபி பற்றி 100,000 துண்டறிக்கைகளை விநியோகம் செய்யும்

leafletடிஏபி,  கடந்த  மாதம்  ஆட்சியாளர்  மன்றம் வெளியிட்ட  அறிக்கையிலிருந்து  ஒரு  பகுதியை  எடுத்து   துண்டறிக்கையாக்கி  அதை  மலாய்க்  கிராமப்புறங்களில்  விநியோகம்  செய்யவிருப்பதாக  கூலாய்  எம்பி  டியோ  நை  சிங்  கூறினார்.

ஆட்சியாளர்களின்  அறிக்கை   முக்கியமான  அறிக்கை  என்றபோதிலும்  ஊடகங்களில்  அதற்கு  உரிய  முக்கியத்துவம் வழங்கப்படவில்லை  என்றாரவர்.

எனவேதான்  டிஏபி, அவ்வறிக்கையை  மக்கள்  நன்கு  புரிந்துகொள்வதற்காக  அதன்  ஒரு  பகுதியை  எடுத்து  100,000  பிரதிகள் அச்சிட்டுள்ளது.

“டிஏபி, மலாய்  மொழியில்  அமைந்த  ஆட்சியாளர்  மன்றத்தின்  அறிக்கையை  100,000  பிரதிகள்  அச்சிட்டிருக்கிறது. அந்தத்  துண்டறிக்கை  மலாய்க்காரர்கள்  வாழும்  கிராமப்புறங்களில்  விநியோகம்  செய்யப்படும். அதன்  மூலமாக  மலேசிய  மக்கள்  நாட்டு  நடப்பைத்  தெளிவாக  புரிந்து  கொள்வார்கள்”, என  டிஏபி  தலைமையகத்தில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  டியோ  கூறினார்.