பறிமுதல் செய்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு

cartoon2010-இல்  உள்துறை  அமைச்சு  பறிமுதல்  செய்த  கேலிச்சித்திரக்காரர்  ஸூனாரின் ‘1Funny Malaysia’, ‘Perak Darul Kartun’ கேலிச்சித்திர  புத்தகங்களை  அவரிடமே  திருப்பிக்  கொடுக்குமாறு  உச்ச  நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி  முகம்மட்  ரவுஸ்  ஷரிப் தலைமையில்  ஐவரடங்கிய  நீதிபதிகள்  குழு,  புத்தகங்களுக்கான  தடையைத்  தள்ளுபடி  செய்த முறையீட்டு  நீதிமன்றத்தின்  தீர்ப்பை  நிலைநிறுத்தி, புத்தகங்கள் திருப்பிக்  கொடுக்கப்பட  வேண்டும்  எனத்  தீர்ப்பளித்தது.

பொது  ஒழுங்குக்கு மிரட்டல்  என்று  கூறி  உள்துறை  அமைச்சு  2010,  மே  10-இல்  அப்புத்தகங்களுக்கு  அச்சக, வெளியீட்டகச்  சட்டத்தின்கீழ்  தடை  விதித்தது.

மலேசியாகினியும்  ஸுனாரின்  செபக்காட்  எபக்டிவ்  நிறுவனமும்  புத்தகங்களை  வெளியிட்டிருந்தன.

2010  தடையை  எதிர்த்து  வெளியீட்டாளர்கள்  வழக்கு  தொடுத்தனர். உயர்  நீதிமன்றம்  அவர்களுக்கு  எதிராக  தீர்ப்பளித்தது.

பின்னர்  முறையீட்டு  நீதிமன்றம் சென்றார்கள்.  அது  உயர்  நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி  செய்தது.