மகாதிர்: வழக்கு தொடுக்கும் வரன்முறைகள் வகுக்கப்பட வேண்டும்

criteriaமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அரசாங்க  வழக்குரைஞரின்  “தனிப்பட்ட  விருப்பத்தின்”  அடிப்படையில்  வழக்குகள்  தொடுக்கப்படாமல்  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி) அலுவலகம்  வழக்கு  தொடுப்பதற்கான  வரன்முறைகளை  வரையறுத்து  வைத்திருக்க  வேண்டும்  என்றார்.

மலேசியாவில்  ஒரு  வழக்கைத்  தொடுப்பதா  வேண்டாமா  என்று  முடிவு  செய்யும்  முழு  அதிகாரமும்  ஏஜியிடம்தான்  உள்ளது  என  ஊழலுக்கு எதிரான  மலேசியாவின்  போராட்டம்  மீதான  கருத்தரங்கில்  தலைமையுரை  ஆற்றிய  மகாதிர்  கூறினார்.

“பில்லியன்  கணக்கான  டாலர்கள்  வழக்கு  ஒன்றில்  அதில்  சம்பந்தப்பட்டிருப்பது  தனக்கும்  மேலே  உள்ளவர்  என்பதால்  நடவடிக்கை  இல்லை  என  ஏஜி தீர்மானித்தால்  நம்மால்  எதுவும்  செய்ய  இயலாது”, என  மகாதிர்  கூறினார்.

ஏஜி  தப்பான  முடிவு  செய்தால்கூட  மக்களால்  எதுவும்  செய்ய  முடியாது.

எனவேதான்  ஏஜியின்  முடிவெடுக்கும்  பொறுப்பை  அகற்ற   வேண்டும்.  அதனிடத்தில்  வழக்குகள்  தொடுப்பதற்கான  வரன்முறைகளை  வரையறுத்து  வைத்திருக்க  வேண்டும்  என்றவர்  பரிந்துரைத்தார்.