1எம்டிபி-யைக் குறைகூறி வருபவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் முகமட் பல்வேறு திட்டங்களில் விரயமாக்கிய பணத்தைக் கூட்டிப்பார்த்தால் அது 1எம்டிபி-இன் கடனைவிட அதிகமாக இருக்கும் என ஜி-25 உறுப்பினர் தஃபிக் இஸ்மாயில் கூறினார்.
இதை மகாதிரிடமே நேருக்கு நேர் அவர் கூறியிருக்கிறார்.
மகாதிர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவி இறக்கும் அவரது இயக்கத்துக்கு ஆதரவு தேடி சான்றோர் குழுவை நாடி அக்குழுவினருடன் கலந்துரையாடல் நடத்தியபோது அவரிடம் இதனைத் தெரிவித்ததாக தஃபிக் குறிப்பிட்டார்.
“அவர் 1எம்டிபி-இல் இழக்கப்பட்ட பணத்தைப் பற்றிப் பேசினார்.
“அப்போது நான் குறுக்கிட்டு அவர் பிரதமராக இருந்த காலத்தில் விரயமான பணத்தைக் கணக்கிட்டால் அது 1எம்டிபி இழந்ததாகக் கூறப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் என்று கூறினேன்.
“அதன் பின்னர் அவர் வாயைத் திறக்கவில்லை”, என தஃபிக் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறினார்.
சான்றோர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமரை நியமனம் செய்ய ‘மூத்தோர் மன்றம்’ ஒன்றை அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் மகாதிர் முன்வைத்தாராம். ஆனால், தஃபிக் அதை ஏற்கவில்லை. அது ஜனநாயகத்துக்கும் அரசமைப்புக்கும் எதிரானது எனக் கூறிவிட்டார்.
தஃபிக் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மானின் புதல்வர் என்பது குறிப்பிட்டது.

























இவன் நாணய ஊக பரிவர்த்தனையில் கோட்டை விட்ட மக்கள் பணத்தை யார் கணக்கில் எழுவது?
உண்மை தாமதமாக வரலாம் ஆனால் கட்டாயம் வெளி வரும். தெரிந்தே செஇத்ச் தவறுகளுக்கு பதில் சொல்லும் காலம் வந்து விட்டது.
சோ இங்கு தஹ்பிக் 1 எம் டி பி யில் பணம் இழக்கப்பட்டது உண்மை என ஒப்புக்கொள்கிறார்.
மாமா மகாதீர் காலத்தில் “பல்வேறு திட்டங்களில் விரயமான பணத்தில்” ஒரு பகுதி “நன்கொடை”யாக உடனிருந்தவர்களுக்கு கிடைத்தது எவ்வளவு என்பதை கூற மறந்து விட்டீர்களா தஃபிக் ?
நீங்கள்தான் “பல்வேறு திட்டங்களில் பணம் விரயமானதாக” கூறுகிறீர்கள், ஆனால் மாமா மகாதீர் கூட உடனிருந்தவர்கள் இன்றுவரை மௌனமாக இருப்பதை பார்த்தால் “நன்கொடை” வலுவாக பெற்றிருப்பார்களோ என மக்கள் சந்தேகபடுவதற்கு வழி வகுத்து விட்டீரே தஃபிக் !