அரசாங்க அதிகாரிகள் பணி அமர்த்தப்படுவதற்கும் பணியிலிருந்து விலக்கப்படுவதற்கும் அரசியல்தான் காரணம் என்று முடிவு கட்டி விடக்கூடாது என்கிறார் அம்னோ எம்பி இர்மொஹிஸாம் இப்ராகிம்.
அரசாங்க நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீடுகள் என்ற கருத்தரங்கில் பேசியபோது அவர் அவ்வாறு கூறினார்.
“பணி நியமனம், பணி உயர்வு, பணி நீக்கம் ஆகியவற்றுக்கு அரசியல்தான் கார்ணம் என்று நினைக்கக்கூடாது.
“சில நேரங்களில், எடுக்கப்படும் அரசியல் முடிவு மக்கள் நலனையும் நாட்டின் நலனையும் பாதுகாப்பதற்கும் தேவையானதாக இருக்கலாம்”, என்றாரவர்.
சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போன்ற “குட்டி நெப்போலியன்களி”ன் கொட்டத்தை ஒடுக்க அது அவசியமாகும் என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான இர்மொஹிஸாம் கூறினார்.
கூட்டத்தில் பலர் அப்துல் கனி பட்டேல் திடீரென்று சட்டத் துறை தலைவர் பதவியிலிருந்து தூக்கப்பட்டது ஏன் என்று வினவியதற்கு அவர் பதிலளித்தார்.
பொய் சொல்றான் பாருங்க