காராக் விரைவுச் சாலையில் துப்புரவு வேலை இன்னும் முடியவில்லை

karakகோலாலும்பூர்-காராக்  விரைவுச் சாலையில்  52.4 கிலோ மீட்டரில்    நிலச்  சரிவு  ஏற்பட்ட  பகுதியைச்  சுத்தப்படுத்தும்  வேலைகள்  இன்று  அதிகாலை  மணி  3.20க்கு  முடிவுக்கு  வந்தன.

ஆனாலும்,  போக்குவரத்துக்கு  இன்னும்  அது  திறந்து  விடப்படவில்லை. எல்லாம்  பாதுகாப்பாக  உள்ளது  என்பதை உறுதி  செய்துகொண்ட  பின்னரே  அது  போக்குவரத்துக்குத்  திறந்து  விடப்படும்  என அச்சாலையைப்  பராமரிக்கும்  அனி  பெர்ஹாட்  கூறியது.

இதனிடையே,  கோம்பாக்- பெந்தோங்  பழைய  சாலையில்  நிலச்  சரிவு  ஏற்பட்டிருப்பதாலும்  பல  இடங்களில்  மரங்கள்  விழுந்து  கிடப்பதாலும்  அதுவும்கூட  மூடப்பட்டிருப்பதாக  பெந்தோங்  போலீஸ்  தலைவர்  சுப்பிரன்டெண்டண்ட்  முகம்மட்  மன்சூர்  முகமட்  நூர்  இன்று  காலையில்  கூறினார்.

“கோம்பாக்கிலிருந்து   பெந்தோங்  செல்ல  விரும்பும்  மோட்டாரோட்டுனர்கள்  அவ்வழியே  செல்ல  வேண்டாம்  என்று  கேட்டுக்கொள்கிறோம். அங்கு  சுத்தப்படுத்தும்  வேலைகள்  நடந்து  வருகின்றன”, என்றார்.