‘நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரிங்கிட் மதிப்பைக் குறைக்கலாம்’

zetiநஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கை இல்லாத் தீர்மானம்  கொண்டுவருவது  பற்றிப்  பேசப்படுவதுகூட  ரிங்கிட்டின்  மதிப்பு  குறைவதற்குக்  காரணமாக  இருக்கலாம்  என  பேங்க்  நெகாரா  மலேசியா நம்புகிறது.

“சந்தை  ஓரளவுக்கு  நிச்சயமற்ற  நிலையில்தான்  செயல்படுகிறது. இந்நிலையில்  அரசியலில்  பதற்றம்  நிலவும்போது அது  சந்தை உணர்வுகளைப்  பாதிக்கிறது.

“இது  நாணய  மாற்று  விகிதங்களையும் சந்தை சுட்டிகளையும்  பாதிக்கும்”,என  பேங்க்  நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்டார்  அசீஸ்  கூறினார்.