பாரிசில் தீவிரவாதிகள் தாக்குதல், 150பேருக்கு மேல் பலி, அவசரகாலம் பிரகடனம்

parisபாரிசில் தீவிரவாதிகள்  உணவகங்கள்,  இசை அரங்கு,  விளையாட்டரங்கு என  பல இடங்களில் நடத்திய  தாக்குதல்களில் 150 பேருக்குமேல்  கொல்லப்பட்டனர்.

அத்தாக்குதல்களினால்  அதிர்ச்சி  அடைந்த  அதிபர்  இப்படிப்பட்ட  கோரமான பயங்கரவாதத்  தாக்குதல்  இதற்குமுன்  பாரிசில்  நிகழ்ந்ததில்லை  என்றார்.

நகரில் அமைந்துள்ள பாடாகிளான் இசை  அரங்கில்  நுழைந்த  தீவிரவாதிகள்  இசை  நிகழ்ச்சி  காண  வந்திருந்த  ரசிகர்களில்  சுமார்  100பேரைச்  சுட்டுக்கொன்றதாக  பாரிஸ்  மாநகராட்சி  மன்ற  அதிகாரி  ஒருவர்  தெரிவித்தார். அதைக்  கண்டு  அரங்கிலிருந்த  ,மற்றவர்கள்  அதிர்ச்சியில்  உறைந்து  போக,  அந்த நேரத்தில்  அக்கட்டடத்தைத்  தாக்கிய  பிரான்சின் பயங்கரவாத- எதிர்ப்பு  மின்னல்  படையினர்  துப்பாக்கிக்காரர்களைச்  சுட்டு  வீழ்த்தி  பயங்கரவாதத்  தாக்குதலில்  உயிர்  தப்பியவர்களை  மீட்டுக்  கொண்டு  வந்தனர்.

பிரான்சின்  தேசிய விளையாட்டரங்குக்கு வெளியில்  இரு  தற்கொலை  வெடிகுண்டுத்  தாக்குதல்  நடத்தப்பட்டது. அப்போது  பிரான்ஸ்,   ஜெர்மன் அணியினரின்  நட்புமுறை கால்பந்தாட்டம் நடைபெற்றுக்  கொண்டிருந்தது. அதிபர்  பிரான்ஸ்வா  ஹொலாண்ட  ஜெர்மன் வெளியுறவு  அமைச்சருடன்  ஆட்டத்தைப்  பார்த்துக்  கொண்டிருந்தார்.

விளையாட்டரங்கிலிருந்து  பாதுகாப்பாக வெளியில்  அழைத்துச்  செல்லப்பட்ட  அதிபர்  ஹொலாண்ட  உடனடியாக நாடு முழுவதும் அவசர காலம்  பிரகடனம்  செய்தார். தாக்குதல்  நடத்தியவர்கள்  தப்பியோடாதிருக்க  பிரான்ஸின்  எல்லைகள்  மூடப்பட்டன.

சீரியாவிலும்  ஈராக்கிலும்  இஸ்லாமிய  தீவிரவாதிகளுக்கு  எதிராக  அமெரிக்கா  தலைமையில்  நடக்கும்  விமானத்  தாக்குதல்களில்  பிரான்ஸும்  கலந்து  கொண்டிருப்பதற்குப்  பதிலடியாகத்தான்  பாரிஸ்  நகரில் இந்த  ஒருங்கிணைந்த  தாக்குதல்கள்  நடத்தப்பட்டிருப்பதாக  தெரிகிறது.

நள்ளிரவில்  தொலைக்காட்சியில்  உரை  நிகழ்த்திய  அதிபர், தாக்குதல்களைப் “பயங்கரம், படு  பயங்கரம்”,  என  வருணித்தார்.

பின்னர் அவர் பலர்  கொல்லப்பட்ட இசை  அரங்குக்குச்  சென்று  பார்வையிட்டார். அப்போது  பயங்கரவாதத்துக்கு  எதிராக  பிரான்ஸின்  போராட்டம்  தொடரும்  என்று  சூளுரைத்த  அவர்  பயங்கரவாதிகளிடம் “கொஞ்சமும்  கருணை காட்டப்பட  மாட்டாது”  என்றார்.