மரண தண்டனையை ரத்து செய்யக் கோரும் எம்பிக்களின் கூட்டம்

 

 

Kuala-deathpenaltyabolitionமரண தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பொருட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய அனைத்துல வட்டமேசை விவாதம் ஒன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கோலாலம்பூரில் நடைபெறவிருக்கிறது.

அந்த விவாதம் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அசிஸ் தலைமையில் நடைபெறும். நடப்பில் சட்டத்துறை அமைச்சர் நான்சி ஷுகிரி மற்றும் சட்டத்துறை தலைவர் (ஏஜி) முகம்மட் அபாண்டி அலி ஆகியோர் மரண தண்டனை சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றிய விவாதத்தில் பங்கேற்கவிருக்கின்றனர்.

இத்தகவலை (PGA)என்றழைக்கப்படும் உலக நடவடிக்கைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மலேசிய குழுவிற்கு செயலாளரான ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

உலகளவில் பிஜிஎ அமைப்பில் 140 நாடாளுமன்றங்களைச் சேர்ந்த 1,1000 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களுடைய சுயபொறுப்பின் அடிப்படையில் அனைத்துலக நீதி, சட்ட ஆளுமை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள்.