பொருள்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரியை டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஒரு “செலாகா” வரி என்று சாடியதோடு அந்த வரி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு (செலாகா) என்று கூறுவதற்காக தம் மீது வழக்கு தொடரப்படலாம். ஆனாலும், அவ்வாறு கூறுவதிலிருந்து தம்மை யாரும் தடுக்க முடியாது என்றாரவர்.
“முதலாவதாக, ஜிஎஸ்டியை நாம் ரத்து செய்தாக வேண்டும். ஒப்புக்கொள்கிறீர்களா? ஜிஎஸ்டி ‘செலாக’ ஆகும். ‘செலாக’ ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட வேன்டும்.
“எனக்குத் தெரியும் ஜிஎஸ்டியை நான் ‘செலாகா’ என்று கூறினால், அவர் என் மீது வழக்கு தொடுக்கக்கூடும், அவர் என்னை நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்வார்”, என்றார் குவான் எங். இது அவர் பிரதமர் நஜிப்பை குறிப்பிடுவதாக இருக்கலாம்.
“ஆனால் பரவாயில்லை, என் மீது குற்றம் சாட்டுங்கள் லா, அது உண்மையிலேயே ‘செலாகா’, இந்த ‘செலாகா’ ஜிஎஸ்டி”, என்று பினாங்கு முதல்வரான குவான் எங் இன்று கட்சியின் வனிதா மாநாட்டில் கூறினார்.
கடன் தொல்லையில் சிக்கியுள்ள 1எம்டிபி போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்கு நஜிப்புக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய குவான் எங், 1எம்டிபி போன்றவைதான் மத்திய அரசாங்கம் மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதற்கு வகைசெய்தது. ஆகவே, மக்கள் அரசாங்கத்திற்கு அதிக வரி செலுத்த வேண்டியுள்ளது என்றார்.
இந்த GST என்பது ஒவ்வொரு சராசரி மலேசியனையும் பாதிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .அரசாங்கம் அதை முற்றிலும் நீக்க முடியாவிட்டாலும் 3 % க்கு குறைக்கலாம் .பிரதமர் தனது பதவி காலத்தில் இதை செய்தால் அவர் மக்கள் மனதில் நிலைக்க வாய்ப்பு உண்டு .
திரு. இராமா தண்ணீர்மலை அவர்களே, இப்போதும், எப்போதும் தற்போதைய பிரதமர் அவரின் செயலால் ( 2.6B நன்கொடை, GST, 1MDB) மக்கள் மனதில் நிலைக்க வாய்ப்பு உண்டு .
ஒபாமா ஓய்வு பெற்ற பின்,அடுத்து வரும் பிரசிடன் போர் நோக்கம் கொண்டவராய் இருப்பின்,நிலைமை மிக மோசமாக கூடும்.
போர் என்றாலே எரிபொருள் மதிப்பு வுயர்ந்துவிடும்,பொருள் விளையும் வுயர்ந்துவிடும் சமாளிப்பது கடினமாகும்.ஐஎஸ் தீவிரவாதிகளை இரும்பு கரம் கொண்டே அடக்க முடியும்.
பொறுத்திருந்து பார்ப்போம்,
வாழ்க நாராயண நாமம்.
உண்மை .நற்செயலால் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் .
“2.6 பில்லியன் நன்கொடை, GST, 1MDB” போன்றவற்றால் நஜிப் மக்கள் மனதில் நிலைக்க வாய்ப்பு உண்டோ இல்லையோ ஆனால் இரட்டை விமான பேரிடரில் பல உயிர்களை பலி கொடுத்த மலேசியாவின் முதல் பிரதமர் என வரலாற்றில் முத்திரை பதிப்பார்.