ஹாடி: டிஎபி ஊராட்சிமன்றத் தேர்தல் நடத்த விடமாட்டோம்

 

 டிஎபி ஊராட்சிமன்ற தேர்தலை அறிமுகப்படுத்துவதை பாஸ் கட்சி எதிர்க்கிறது ஏனென்றால் சீனர்கள் நகரங்களைக் கைப்பற்றுவதை அது விரும்பவில்லை என்று பாஸ் தலைவர் அப்துல் ஹடி அவாங் கூறினார்.

“டிஎபி ஊராட்சிமன்ற தேர்தல்கள் நடத்துவதை நாங்கள் தடுப்போம் (ஏனென்றால்) சீனர்கள் நகரங்களை வெற்றிகொள்வார்கள்.

“நகரங்கள் டிஎபியின் கட்டுப்பாட்டிற்குள் வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம், (ஏனென்றால்) மது மற்றும் சூதாட்டம் ஆகியவற்றுக்கு முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுவர்”, என்றாரவர்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தில் டிஎபி தொடர்ந்து இருப்பது அவசியம் ஏனென்றால் பாஸ் கட்சி கிளந்தானில் செய்தது போல தவறான கொள்கைகளை சிலாங்கூரில் அமலாக்குவதைத் தடுப்பதற்கு இது தேவைப்படுகிறது என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய ஹாடி இவ்வாறு கூறினார்.