ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளவர்களின் பட்டியலில் மலேசியத் தலைவர்கள் பலர் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
தேசிய பாதுகாப்பு அமைப்புகளுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களிலிருந்து இது தெரிய வந்திருப்பதாக த ஸ்டார் ஆன்லைன் கூறியது.
தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், ஐஎஸ் குறி வைத்துள்ள தலைவர்களின் பட்டியலில் தம்முடைய பெயரும் இருப்பதாக நேற்று தெரிவித்தார்.
“ஐஎஸ் நம் தலைவர்களுக்குக் குறி வைத்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறேன். ஆனால், அம் மருட்டலால் நாட்டிலும் இவ்வட்டாரத்திலும் பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் நடத்தும் போராட்டம் நிற்காது”, என ஹிசாமுடின் குளுவாங்கில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறினார்.
புக்கிட் அமான் அதிகாரி ஒருவர் மூத்த அமைச்சர்கள் பலரை ஐஎஸ் குறி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
“ஐஎஸ் உறுப்பினர் மூராட் ஹலிமுடினை விசாரித்தபோது அவர்களின் பெருந் திட்டம் தெரிய வந்தது”, என்றாரவர்.
நல்ல ஜோக் !
யாருடைய தலைக்கு முதலிடம் என்று சொல்லிவிட்டால் பிற தலைவர்கள் நிம்மதி பெரு மூச்சு விடுவார்களே.
ஆகாயத்தில் போகும் சனியை ஏணி வைத்து இறக்கினால் இதற்க்கு மேலும் நடக்கும் !
காதுல பூ