பினாங்கு ஆட்சிக்குழுவினரின் சம்பளம் இரு மடங்காக அதிகரிப்பு

assembleபினாங்கு  சட்டமன்றத்தில்  ஆட்சிக்குழுவினரின் சம்பளத்தை  100விழுக்காடு  அதிகரிக்க  சில  சட்டத்  திருத்தங்கள்  கொண்டுவரப்படும்  எனத்  தெரிகிறது. அதன்  பலனாக  சட்டமன்ற  உறுப்பினர்களின்  சம்பளமும்  கிட்டத்தட்ட  இரு  மடங்கு  அதிகரிக்கும்.

சட்டமன்றம்  இன்று தொடங்கி  வெள்ளிக்கிழமைவரை  நடைபெறும்.

வெள்ளிக்கிழமை  திருத்தங்கள்  ஏற்கப்பட்டால்  புதிய  சம்பள  அதிகரிப்பு ஜனவரி  முதல்  அமலுக்கு  வரும்.

சட்டமன்றத்  தலைவர்  சம்பளமும்  உயரும். ஆனால்,  முதலமைச்சரின்  சம்பளத்தில்  மாற்றமிருக்காது.

எதிரணித்  தலைவர்  ஜஹாரா  ஹமிடின்  அலவன்ஸ் ரிம2,000- இலிருந்து  ரிம3,000 ஆக (50 விழுக்காடு)  உயரும்.

ஆட்சிக்  குழு உறுப்பினர்களின்  நடப்புச்  சம்பளம்  ரிம6,109.29 -இலிருந்து  ரிம12,109 ஆக  உயர்கிறது.

40 சட்டமன்ற  உறுப்பினர்களின்  இப்போதைய  சம்பளம் ரிம6,000. இனி, அது  ரிம11,250 ஆகிறது.