பிரதமருக்கு எதிரான பிகேஆரின் இரண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானங்களில் ஒன்று திரும்பப் பெறப்பட்டது

parlபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  பதிவு  செய்திருந்த  நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தை  ஹீ லோய்  சியான்  மீட்டுக்கொண்டிருக்கிறார்.

இதை  மக்களவைத்  துணைத்  தலைவர்  இஸ்மாயில்  முகம்மட்  சைட்  இன்று  அறிவித்தார்.

“ஹீ,  எழுத்துப்பூர்வமாக  தெரியப்படுத்தி   தீர்மானத்தைத்  திரும்பப் பெற்றுக்  கொண்டார்”, என  இஸ்மாயில்  கூறினார்.

ஹீயைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு “எதிரணித்  தலைவரின்  தீர்மானத்துக்கு  இடமளிக்கும்  வகையில்” தன்னுடைய  தீர்மானத்தைத்  திரும்பப் பெற்றுக்  கொண்டதாக  தெரிவித்தார்.

எதிரணித்  தலைவர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயிலும்  நஜிப்புக்கு  எதிராக  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  ஒன்றை  சமர்ப்பித்துள்ளார்.

ஆனால், நாடாளுமன்றக்  கூட்டத்தொடரில்  அரசாங்கத்  தீர்மானங்களுக்குத்தான்  முன்னுரிமை  கொடுக்கப்படும்  என்பதால்  அவரது  தீர்மானம்  விவாதத்துக்கு  விடப்படுவது  சந்தேகமே.

நஜிப்மீது  நாடாளுமன்றத்துக்கு  நம்பிக்கை  இல்லை  என்பதைக்  காண்பிக்க  இன்னொரு  வழியும்  உண்டு. பட்ஜெட்டை  நிராகரிப்பதுதான்  அது.

ஆனால், எதிரணி  இதில்  ஒன்றுபட்டு  வாக்களிப்பதும்  சந்தேகம்தான். பாஸ்  வாக்களிப்பில்  கலந்துகொள்ளப்  போவதில்லை  என  ஏற்கனவே  அறிவித்துள்ளது.