குவான் எங்: நானே நாட்டில் குறைவான சம்பளம் பெறும் சிஎம்

assembleபினாங்கில்    ஆட்சிக்குழு  உறுப்பினர்களுக்கு 100 விழுக்காடு  சம்பள  உயர்வு  வழங்கப்படுவது  நியாயம்தானா  என்று  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கிடம்  வினவியதற்கு,  தானே நாட்டில்  “மிகக் குறைந்த சம்பளம்” பெறும்  முதலமைச்சர்  என்று  பதிலளித்தார்.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  சம்பளம்  உயரவில்லை  அதைப்போன்று  தம்முடைய  சம்பளமும்  அதிகரிக்கப்படவில்லை  என்றாரவர்.

சிலாங்கூரையும் வளர்ச்சியடைந்த  சரவாக்  போன்ற  மாநிலங்களையும்  பின்பற்றி பினாங்கும்  அதன்  சட்டமன்ற  உறுப்பினர்களின்  சம்பளத்தை  உயர்த்தி  இருப்பதாக  லிம்  கூறினார்.

“அதற்கு  இது   சரியான  நேரமல்ல  என்பதை  உணர்கிறோம். ஆனால், வாழ்க்கைச்  செலவினம்  உயர்ந்திருப்பதால்  அதைச்  செய்ய  வேண்டியதாயிற்று”, என்றாரவர்.

லிம்மின்  முதலமைச்சர்  பதவிக்கான   மாதச்  சம்பளமான  ரிம14,000-த்தில்  எந்த  மாற்றமுமில்லை. ஆனால், அவரது ஆயர் பூத்தே  சட்டமன்ற  உறுப்பினருக்கான  அவரது  ரிம6,000  சம்பளம்  ரிம11,250 ஆக உயர்கிறது.