அரசு-தொடர்பு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதுண்டு ஆனால், நன்கொடை அளிப்பதற்கென்றே நிரந்தரமான ஒதுக்கீடுகளை அவை வைத்திருப்பதில்லை எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.
அரசியல்வாதிகள் நன்கொடை கேட்கும்போது அவற்றிடம் போதுமான நிதி இருந்தால் கொடுத்துதவும்.
அந்த உதவியும்கூட பள்ளிகளின் விளையாட்டுத் தினம், வெள்ள நிவாரண உதவி, நோன்பு திறப்பு நிகழ்வுகள், வசதியில்லாதவர்களுக்காக நடத்தப்படும் ஹரி ராயா நிகழ்வுகள் போன்றவற்றுக்குத்தான் வழங்கப்படுகிறது.
1981-இலிருந்து 2014வரை ஜிஎல்சிகள் அரசியல்வாதிகளுக்கு வழங்கிய நன்கொடை பற்றித் தெரிந்துகொள்ள விரும்பிய பண்டார் துன் ரசாக் எம்பி (சுயேச்சை) காலிட் இப்ராகிமுக்கு நிதி அமைச்சர் என்ற முறையில் எழுத்துப்பூர்வமாக வழங்கிய பதிலில் நஜிப் இவ்வாறு கூறினார்.