பாஸ் கிளந்தான் இளைஞர்கள் ஹுசாம்-முஸ்தபா மோதலுக்கு மேடை அமைத்துக்கொடுக்கத் தயார்

face offபாஸ்   தேர்தல்  இயக்குனர்  முஸ்தபா  அலியும்  பாஸ்  சட்டமன்ற  உறுப்பினர்  ஹுசாம்  மூசாவும்  நேருக்கு நேர்  வாதமிடுவதாக  இருந்தால்  அதற்கான  ஏற்பாடுகளைச்  செய்ய  கிளந்தான்  பாஸ்  இளைஞர்  பகுதி  முன்வந்துள்ளது.

பாஸ்-அம்னோ  இணைப்புக்காக  பாடுபட்டவர்களில்  முஸ்தபாவும்  ஒருவர்  என்றும்  அதற்காக  அவர்  அம்னோ  தலைவர்களைச்  சந்தித்தார்  என்றும் ஹுசாம்  கூறியதுதான்  அவர்களுக்கிடையில்  சர்ச்சை  மூள்வற்குக்  காரணம்.

அக்குற்றச்சாட்டுக்குப்  பதிலளித்த  முஸ்தபா  அது  பற்றி ஹுசாமுடன்  நேரடியாக  வாதிக்க  தயார்  என்று   மலாய்மொழி  நாளேடு  சினார்  ஹரியானிடம்  தெரிவித்தார். அந்த  நேரடி  விவாதத்தை  கிளந்தான், கோத்தா  பாருவில்  வைத்துக்கொள்ளலாம்  என்றும்  அவர்  கூறினார்.

இந்நிலையில்தான்  கிளந்தான்  பாஸ்  இளைஞர்  தலைவர்  அஹமட்  ஃபாத்லி  ஷாரி  ஹுசாம்- முஸ்தபா  விவாதத்துக்கு  மேடை  அமைத்துக்  கொடுக்க  முன்வந்திருக்கிறார். அந்நிகழ்வுக்கு  நிறைய  பேர் வருவார்கள்  என்றும் அவர்  சொன்னார்.

“இது   அவ்விவகாரம்  பற்றி  சம்பந்தப்பட்டவர்களே  விளக்கமளிப்பதைக்  கேட்பதற்கு  ஒரு  வாய்ப்பாக  அமையும்”, என்றாரவர்.