பட்ஜெட்டுக்கு எதிர்ப்பாக வாக்களித்தது ஏன்? பாஸ் அதன் எம்பிகளிடம் விளக்கம் கேட்கும்

votingபாஸ்  கட்சி  அதன்  முடிவைப்  புறந்தள்ளி  பட்ஜெட்டுக்கு  எதிராக வாக்களித்த கட்சி  எம்பிகள்  மூவரிடமும்  விளக்கம்  கேட்கும்  என  அதன்  தலைமைச்  செயலாளர்  தகியுடின்  ஹசான்  கூறினார்.

“அவர்கள்  கட்சியின்  உத்தரவின்படி  நடக்காமல் மனசாட்சிப்படி  நடந்து  கொண்டிருக்கிறார்கள்.  இது ஒரு  சின்ன  விவகாரம்தான். அவர்கள்மீது  ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கப்பட  மாட்டாது”, என்றவர்  நாடாளுமன்றத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

பாஸின்  கண்ணோட்டத்தில்  பட்ஜெட்  இஸ்லாத்துக்கு  ஏற்புடையதல்ல,  குறைபாடுடையது  என  தகியுடின்  சொன்னார்.

பட்ஜெட்  வாக்களிப்பில்  கலந்துகொள்வதில்லை  என்று பாஸ்  முடிவு  செய்திருந்தது. ஆனால், கட்சியின்  முடிவையும்  மீறி   பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்,  பாசிர்  பூத்தே  எம்பி  நிக்  மசியான்  நிக்  முகம்மட்,  குபாங்  கிரியான்  எம்பி  அஹ்மட்  பாய்ஹாகி அதிகுல்லா  ஆகிய  மூவரும்  பட்ஜெட்டுக்கு  எதிராக  வாக்களித்தனர்.