போதைப் பொருள் கடத்தலுக்குக் கட்டாய மரண தண்டனை இரத்து செய்யப்படலாம்

drugபோதைப்  பொருள்  கடத்தலுக்கும்  அதன்  தொடர்பான  குற்றச் செயல்களுக்கும்  கட்டாய  மரண  தண்டனையை  இரத்துச்  செய்ய   1952ஆம் ஆண்டு அபாயகரமான மருந்துகள்  சட்டத்திற்கு  அடுத்த  மார்ச்  மாத  நாடாளுமன்றக்  கூட்டத்  தொடரில்  திருத்தங்கள்  கொண்டுவரப்படலாம்  என்று  நடப்பில்  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி  தெரிவித்தார்.

அதன்  பின்னர்  அப்படிப்பட்ட  குற்றங்களுக்கு  மரண தண்டனை  விதிப்பதா  வேண்டாமா  என்பதை  நீதிபதிகளே  முடிவு  செய்வார்கள்.

தேவையான  திருத்தங்களைச்  சட்டத்துறை  தலைவர் (முகம்மட்  அபாண்டி  அலி)  விரைவில்  செய்து  முடிப்பார்  என்று  எதிர்பார்ப்பதாக  அவர்  கூறினார்.