குவா மூசா எம்பி தெங்கு ரசாலி ஹம்சா 2016 பட்ஜெட்டை ஆதரிக்கிறார்.
அப்படியானால் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ஆதரிக்கிறாரா என்று வினவியதற்கு அவர் நேரிடையாக பதிலுரைக்கத் தயங்கினார்.
“நிதி அமைச்சர் அவரே பிரதமர் அடுத்த ஆண்டுக்காகக் கொண்டுவந்த திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்”, என தெங்கு ரசாலி கூறினார்.
அதற்கு மேலும் விளக்கம் கேட்டபோது, “எதற்கு இத்தனை கேள்விகள்? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து விட்டு நகர்ந்தார்.
அப்படி நகர்ந்து செல்லுகையில் நேற்றைய பட்ஜெட் மீதான வாக்களிப்பு பிஎன்னில் நஜிப்புக்கு இன்னும் வலுவான ஆதரவு இருப்பதைக் காண்பிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோரேக் கோரேக் கோரெங் (கோ சு கூன் )வாக்கியம்,வாழ்க நாராயண நாமம்.
ஆதரித்துவிட்டு அப்புறம் என்ன ஆனால் நோனாலென்று .