ஸ்பாட்டுக்கு எதிராக டெக்சி ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்

taxiசுமார்  250   டெக்சி  ஓட்டுனர்கள்  இன்று  கோலாலும்பூர்  பாடாங்  மெர்போக்கில் ஒன்றுதிரண்டு  நில, பொதுப் போக்குவரத்து  ஆணைய(ஸ்பாட்)த்க்கு  எதிர்ப்புத்  தெரிவித்ததுடன்  “உபர்டெக்சி” “கிராப்கார்”  போன்றவற்றைத்  தடை  செய்யவும்  கோரிக்கை  விடுத்தனர்.

கிள்ளான்  பள்ளத்தாக்கின்  பல  பகுதிகளிலிருந்தும்  வந்திருந்த  அவர்கள் “ஹிடுப்  டெக்சி”  என  முழக்கமிட்டனர். “வேண்டாம் உபர்”, “பிரதமரே,  உதவுங்கள்”  என்ற வாசகங்களைக்  கொண்ட  பதாதைகளை    ஏந்தியிருந்தனர்.

சிலர்  அவர்களின்  கார்களின்  ஹாரன்களில்  ஒலி  எழுப்பினார்கள். வேறு  சிலர்  வுவுசுலா  ஊதுகுழல்  கருவிகளை  ஊதி  ஒலி  எழுப்பினார்கள்.

அந்த  ஆர்ப்பாட்டத்தில்  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்  நசருடின்  தந்தாவியையும்  காண  முடிந்தது.