நெடுஞ்சாலைக்கு ரிம800 மில்லியன் கூடுதல் செலவானதற்கு அரசே பொறுப்பு: பிஏசி குற்றச்சாட்டு

highஇரண்டாவது  கிழக்குக் கரை  நெடுஞ்சாலையின் கட்டுமானச்  செலவில் ரிம800 மில்லியன்  கூடியதற்கு  குத்தகையாளர்கள்  வேலையைத்  தாமதப்படுத்தியதுதான்  முக்கிய  காரணம்  என்றாலும்  புத்ரா  ஜெயாவுக்கும்  ஓரளவு  பொறுப்புண்டு.

இதனை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்ட  கிழக்குக் கரை  நெடுஞ்சாலை  மீதான  அதன்  அறிக்கையில்   தெரிவித்த  பொதுக் கணக்குக்குழு (பிஏசி), வருங்காலத்தில்  நெடுஞ்சாலை  குத்தகைகளை  வழங்கும்போது  தகுதியுடைய  குத்தகையாளர்களைத்  தேர்ந்தெடுக்க  வேண்டும்  என்றும்  வலியுறுத்தியது.

அந்த  நெடுஞ்சாலையைக்  கட்டணம்  செலுத்தும்  சாலையாக  மாற்ற  அரசாங்கம்  முடிவு  செய்ததும்  கட்டுமானச்  செலவு  அதிகரித்ததற்கு  ஓரளவு  காரணமாகும்  என்றும்  அது  குறிப்பிட்டது.