மகாதிர்: கைருடின், சாங் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டது

justiceமத்தியாஸ்  சாங்,  கைருடின்  அபு  ஹாசான்  ஆகிய  இருவரையும்  பிணையில்  விடுவிக்க   உயர்  நீதிமன்றம்  அளித்த தீர்ப்பை  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  பாராட்டியுள்ளார்

அவ்விருவரும்  கீழறுப்பு  வேலைகளில்  ஈடுபட்டதாக   சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு  பாதுகாப்புக் குற்றங்கள்  சட்டத்தின்கீழ்  வரவில்லை  என்பதால்  அவர்களைப்  பிணையில்  விடுவிக்க  உயர்  நீதிமன்றம்  முடிவு  செய்தது.

“நீதி  நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி,  இதுவே  நீதிபதிகளின்  நிலைப்பாடாக  இருத்தல்  வேண்டும்.  அவர்கள்  தீர்ப்பளிப்பதில்  நடுநிலைமையைக்  கடைப்பிடிக்க  வேண்டும்”, என  மகாதிர்  கூறினார்.

சாங்  மகாதிரின்  அரசியல்  செயலாளராக  இருந்தவர். கைருடின்  அண்மையில்  கட்சிநீக்கம்  செய்யப்பட்ட  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவர்.