கூ நான்:: யாரோ சிப்பாங் அம்னோவைக் கிளர்ச்சிசெய்ய தூண்டிவிட்டிருக்கிறார்கள்

kunanபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிர்ப்புக்  கொடி காட்ட  யாரோ  சிப்பாங்  அம்னோவைத்  தூண்டி  விட்டிருக்கலாம்  என  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  சந்தேகப்படுகிறார்.

“அந்தக்  கிளைத்  தலைவர்கள்தான்  இதைச்  செய்தார்களா  அல்லது  யாராவது  அவர்களை  ஆட்டுவிக்கிறார்களா  என்பதைக்  கண்டறிவோம்”, என  தெங்கு  அட்னான்  நாடாளுமன்ற  வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நேற்று  சிப்பாங்  அம்னோ  உறுப்பினர்கள்  சுமார்  20 பேர்  நஜிப்  பதவி  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்தது  பற்றிக்  கேட்டதற்கு  தெங்கு  அட்னான்  அவ்வாறு  கூறினார்.

இதற்கு  முன்பு  அக்டோபர்  13-இல்  தெலோக்  கெமாங்  அம்னோ  கிளையைச்  சேர்ந்தவர்கள்  இதேபோன்று  நஜிப்பின்  விலகலுக்குக்  கோரிக்கை  விடுத்தனர்.

“அதை  விசாரித்தபோது  அங்கு (நஜிப்புக்கு)  பெரிய  எதிர்ப்பு  இருப்பதுபோல் தெரியவில்லை.

“யாரோ  அம்னோவை உடைக்க  முயல்கிறார்கள்”, என்று  தெங்கு  அட்னான்  கூறினார்.