எட்ரா நிறுவனம் விற்கப்பட்டால் மின்கட்டணம் உயரக்கூடும்- ரபிஸி

edra1எம்டிபி-இன் துணை  நிறுவனமான  எட்ரா  எனர்ஜி  சீனா- கத்தார்  கூட்டு  நிறுவனத்துக்கு  விற்கப்பட்டால்  மின்  கட்டணம்  கூடும்  சாத்தியம்  இருப்பதாக   பாண்டான்  எம்பி ரபிஸி  ரம்பி  எச்சரிக்கிறார்.

அந்த  அனைத்துலக  நிறுவனம்  பெரும் விலைக்கு  எட்ராவை  வாங்குவதால்  இது  நடக்கலாம்  என்று  அவர்  நம்புகிறார்.

எட்ராவின்  விலை  ரிம8 பில்லியன்தான். ஆனால்  சீனா-கத்தார்  கூட்டு  நிறுவனம்  ரிம10 பில்லியன்  கொடுக்க  முன்வந்துள்ளது.

“ரிம2 பில்லியன்  கூடுதலாகக்  கொடுக்கும்போது, அதைத்  திரும்பப்  பெறப்  பார்ப்பீர்கள், இல்லையா.

“அதற்காக  மின்கட்டணம்  உயர்த்தப்படலாம்  என்று  அஞ்சுகிறேன்”,  என்று  ரபிஸி  குறிப்பிட்டார்.