பிணையாளி ‘கொடூரக் கொலை’: பிரதமர் அதிர்ச்சி

hosபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அபு  சயாப்  கடத்தல்காரர்கள்  பிணை பிடித்து வைத்திருந்த  மலேசியர்  பெர்னார்ட்  தென்  “கொடூரமாக”  தலைவெட்டிக் கொல்லப்பட்டதை  அறிந்து  அதிர்ச்சி  தெரிவித்தார்.

“நானும்  அரசாங்கமும்  எல்லா  மலேசியர்களும்  சக  மலேசியரான  பெர்னார்ட்  தென்  கொல்லப்பட்டதை  அறிந்து  அதிர்ச்சி  அடைகிறோம்  அருவறுப்பு  கொள்கிறோம். அச்செயலைக்  கடுமையாக  கண்டிக்கிறோம்.

“இந்தக்  கொடூரமான,  காட்டுமிராண்டித்தனமான  செயலைப்  புரிந்தவர்கள்மீது நடவடிக்கை  எடுத்து  அவர்களை  நீதிமுன்  நிறுத்த  வேண்டுமென  அதிகாரிகளைக்  கேட்டுக்கொள்கிறோம்”, என்று  பிரதமர்  ஓர் அறிக்கையில்  கூறினார்.