ஒரு சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் டெக்சி ஓட்டுனர் ஹனிசான் முகம்மட் ரட்ஸி தவறாகத் தடுத்து வைக்கப்பட்டது “போலீஸ் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நல்ல எடுத்துக்க்காட்டு” என கெராக்கான் இளைஞர் தலைவர் எண்டி யோங் கூறினார்.
கடத்தலுக்கு ஆளான சிறுவன் தெருவில் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்ட ஹனிசான், சிறுவனை அழைத்துச் சென்று அவனது வீட்டில் ஒப்படைத்தார். ஆனால். போலீசார் அவர்தான் சிறுவனைக் கடத்திச் சென்றவர் எனக் குற்றஞ்சாட்டி ஹனிசானைக் காவலில் வைத்து விட்டனர். பிறகு அவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
நேற்று நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையம்(ஸ்பாட்) ஹனிசானின் செயலைப் பாராட்டி அவருக்குச் சிறப்பு விருது வழங்கிச் சிறப்பித்தது.
ஆனாலும், போலீசின் நடவடிக்கை அவரின் குடும்பத்துக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது என வழக்குரைஞரும் கெராக்கான் வழக்குரைஞர் குழுத் தலைவருமான யோங் கூறினார்.
இப்படி நடப்பது முதல் முறை அல்ல என்று கூறிய யோங், சட்டவிரோதமாகக் கைது செய்யப்படுபவர்கள் அவர்களின் உரிமைகளை உணர வேண்டும் என்றார்.
“இது அநியாயம். இப்படியே விட்டால் போலீஸ் அவர்களின் விருப்பம்போல் நடந்துகொள்ள இது வழிகோலும்”, என்றாரவர்.
கைது செய்வதற்கு போலீஸ் தகுந்த ஆதாரங்களைக் காண்பிக்க வேண்டும்.
“குற்றம் செய்யாமலேயே தடுத்து வைக்கப்படுவோர் அவர்களின் உரிமைகளை உணர்ந்து தவறாகக் கைது செய்யப்பட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றியும் ஆலோசிக்க வேண்டும்”, என யோங் கூறினார்.

























மலேசியா போலிஸ் ரோச்மாஹ் நஜிஸ் போலிஸ் அது திருடர்களுக்கு உதவும் போலிஸ் மக்களுக்கு அல்ல
ஏதோ தவறு நடந்து விட்டது… அதற்காக போலிஸ் துறையையே குறை சொல்லகூடாது…. அங்கு உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கு தெரியும்…..
தெருவில் குழந்தைகள் நடமாடினால் வுடனே எட்ரிகொண்டு பெற்றொருடன் சேர்ப்பது என்றால் இதற்கென்றே பல டேக்சி தேவைப்படும்.
அக்குழந்தையை முதலில் அருகில் வுள்ள காவல் நிலத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும்.ஸ்பாட் விருது ஏன் வழங்கியது.குழந்தையை கடத்தல் காரர் விடுவிப்பார் வுடனே ஒருவர் காவல் துறைக்கு தெரிய படுத்தாது தன் வாகனத்தில் யெற்றிகொண்டு பெற்றொரிடம் ஒப்படைப்பார்.காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்க்குமா?காவல் துறையின் வேலையை அவர்கள் செய்யட்டும்,அவர் வுன்மையில் டேக்சி வோட்டுனரா சந்தேகம்,நாராயண நாராயண.
மலேசியா காவல் துறைக்கு வக்காளத்து வாங்கரணுங்க பாரு சில அறிவேயில்லாத bn மலம் சாப்பிடும் பச்சை மக்கள் துரோகிககள்
அந்த வாடகைக்கார் ஓட்டுனர் சந்தேகபடும்படி நடந்துகொண்டார் …