மலேசியாவில் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட மாட்டாது எனத் தொடர்[பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் உத்தரவாதம் அளித்துள்ளார்.
“முகநூலுக்கும் மற்ற சமூக வலைத்தளங்களான டெலிகிராம், வாட்ஸ் அப் போன்றவற்றுக்கும் தடை விதிக்கும் எண்ணம் அமைச்சுக்கு இல்லை. மலேசியர்களில் பெரும்பாலோர் தொடர்புக்கும் தொழில் செய்யவும் இவ்வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.
அமைச்சர் சைனுடின் இஸ்மாயிலின்( பிஎன் -ஜெலுபு) கேள்விக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு கூறினார். சீனாவில் செய்யப்பட்டதுபோன்று மலேசியாவிலும் சில சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுமா சைனுடின் கேட்டிருந்தார்.

























நீங்க ஒரு கதவை அடைத்தால் இன்னொரு ஜன்னல் திறக்கப் போகுது. அப்புறம் எப்படி தடுப்பீர்கள். எல்லாவற்றையும் தடுத்தால் நாட்டின் பொருளாதாரம் கவுத்துக்கும்.
இப்பயே பொருளாதாரம் நக்கி கிட்டு இருக்கு திருடன் திருடி பதவி துறக்காத வரை மலேசியா பொருளாதாரம் நக்கியோன் சக்கியோன் கதை தான்
சூப்பர் அசகாயம் அருமையாக சொன்னீர் …
யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே தமிழ் பழமொழி
வாழ்க நாராயண நாமம்.