ஆசியான் ஜிடிபி 2019வரை ஆண்டுக்கு 5.6 விழுக்காடு உயரும், நஜிப்

aseanஆசியான் பொருளாதாரச்  சமூகம்(ஏஇசி)  உருவாகவிருக்கும்  வேளையில்  ஆசியானின்  மொத்த  உள்நாட்டு  உற்பத்தி  2019வரை  ஆண்டுக்கு  5.6 விழுக்காடு உயர்வு  காணும்  என  எதிரபார்க்கப்படுவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார்.

“ஏஇசி உருவாக்கப்படவுள்ள  வேளையில்  ஆசியானுக்கு  வரும்  அன்னிய  நேரடி  முதலீடுகளும்  தொடர்ந்து  அதிகரிக்கும்  என்ற  நம்பிக்கை  எனக்குண்டு”, எனப்  பிரதமர்   வர்த்தக, முதலீடு மீதான  2015 ஆசியான்  உச்சநிலை  மாநாட்டைத்  தொடக்கி  வைத்தபோது  குறிப்பிட்டார்.

கடந்த  பல  தசாப்தங்களாக  நிலையான  பொருளாதார  வளர்ச்சியைக்  கொண்டிருப்பதற்காக  அவர்  ஆசியானைப்  பாராட்டினார்.

வர்த்தகத்துக்கும்  முதலீட்டுக்கும்  கவர்ச்சியான இடமாக  விளங்குவதன்  மூலம்  ஆசியான்  கூடுதல்  பொருளாதார  வாய்ப்புகளையும்  வேலைவாய்ப்புகளையும்  உருவாக்க  முடியும்  என்றாரவர்.

“ஆசியானில்  வாழ்க்கைத்தரத்தை  உயர்த்துவது  நம்  அனைவரின்  பொறுப்புமாகும்”, என்றார்.

கடந்த  ஆண்டு  அசியானில்  செய்யப்பட்ட  மொத்த  அன்னிய  நேரடி  முதலீடு யுஎஸ்136 பில்லியன்.  இது  அமெரிக்கா, சீனா  ஆகியவற்றில்  செய்யப்பட்ட  முதலீட்டை  விட  அதிகமாகும்.