கோலாலும்பூரில் ஆசியான் உச்சநிலைக் கூட்டம் நடைபெறும் வேளையிலும் மலேசியா தேசிய நிந்தனைச் சட்டத்தைக் கொண்டு எதிரணித் தலைவர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை Amnesty International எனப்படும் பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பு(ஏஐ) கண்டித்துள்ளது.
“பேச்சுரிமையைப் பயன்படுத்தியதற்காக எதிரணி அரசியல்வாதி(முன்னாள் பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன்மீது குற்றம்சாட்டுவதைத் தவிர்க்குமாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பு மலேசிய அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறது.
“உலகின் கண்கள் மலேசியா ஏற்று நடத்தும் ஆசியான் தலைவர்கள் கூட்டத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் வேளையில்கூட அதிகாரிகள் அரசாங்கத்தை எதிர்த்துப் பேசுவோருக்கு எதிரான அடக்குமுறையை விடாது தொடர்கிறார்கள்”, என ஏஐ வட்டார துணை இயக்குனர் ஜோசப் ரோய் பெனடிக்ட் ஓர் அறிக்கையில் கூறினார்.
வியாழக்கிழமை கைதான அருட்செல்வனிடம் திங்கள்கிழமை அவருக்கு எதிராக தேச நிந்தனைக் குற்றச் சட்டத்தின்கீழும் தொடர்பு, பல்லூடகச் சட்டத்த்ன்கீழும் குற்றம் சாட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டதற்காக அருட்செல்வன்மீது வழக்கு தொடரப்படுவதாக தெரிகிறது.
இவன் பின்னணியில் நிறைய நிலங்கள் லஞ்சமாக செலங்கோரில் சுருட்டபட்டன! அடிமட்ட தொண்டர்கள் அறியாத உண்மை!
ஐயா இடி என்ன சொல்கிறீர்கள்? யார் பின்னணியில் யாருடைய நிலங்கள் சுருட்டப்பட்டன? சிறிது தெளிவாக சொல்கிறீர்களா?
நான் அறிந்தமட்டில் போராட்ட உணர்வுமிக்க ஓர் அருமையான சேவையாளர் அருட்செல்வன். ‘இடி’ சொல்வது குழப்பமாக உள்ளது.
PSM தொண்டர்கள் என்ற போர்வையில் அருட்செல்வதுடன் போராட்டம் நடத்துவதுவபோல் நாடகம் ஒரு பக்கம் நிலங்கள் சுருட்டியது இன்னொரு பக்கம்.எந்த போராட்டம் நடத்தினாலும் அதற்கு ஒரு விலை இருக்கிறது.இவர்கள் போராட்டம் அனைவரின் பார்வையில் சரிதான் ஆனால் இடையில் சில கட்சி பச்சோந்திகள் அவர்களுக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டது அருட்செல்வம் அறிந்தும் தடுக்க முடியாத உண்மை.செலங்கோர் மக்களுக்கு இலவச நிலங்கள் வழங்கியபோது இவர்கள் கட்சியில் சிலர் மும்முரமாக ஈடு பட்டு இருந்தனர் அதை ஆராய்ந்த பொது வெளிவந்த உண்மைகள்.அன்று சுருட்டிய நிலங்களின் விலை இன்று பல மடங்கு.