வாக்களிக்காத பிகேஆர் பிரதிநிதிகள் அம்னோவுக்குத் துணை போனவர்கள்: குவான் எங் குற்றச்சாட்டு

guan engபினாங்கு   முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  நேற்று பினாங்கு  சட்டமன்றத்தில்  நிலமீட்பு  மீது  அம்னோ  கொண்டுவந்த  தீர்மானத்துக்கு  எதிராக  வாக்களிக்காமல்  ஒதுங்கிக்  கொண்ட  அதன்  ஐந்து  பிரதிநிதிகளின்  செயல்  சரிதானா  என்பதை  பிகேஆர்  “கவனமாக  மதிப்பிட  வேண்டும்”  என்று  கேட்டுக்கொண்டார்.

“அவர்கள்  இப்போது  அம்னோவுக்கு  ஆதரவாக  இருப்பதுபோல்  தெரிகிறது. ஆனாலும், இவ்விவகாரத்தை  அம்னோவிடமே  விட்டு  விடுகிறோம்”, என்று  லிம்  கூறினார்.

நேற்று  முகம்மட்  பரிட்  சாஅட் (பிஎன் -பூலாவ்  பெத்தோங்)  நிலமீட்பு  மீது  கொண்டுவந்த  தீர்மானத்தைத்  தோற்கடிப்பதில்  லிம்முக்கு  அவரது   அணியின்  ஒட்டுமொத்த  ஆதரவு  கிடைக்கவில்லை.

சட்டமன்றத்தில்  இருந்த  38 பேரில்  ஒன்பது  அம்னோ  பிரதிநிதிகள் (ஒருவர் வரவில்லை) ஆதரவாக  வாக்களிக்க 22 பேர்(18- டிஏபி, 4- பிகேஆர்) எதிர்த்து  வாக்களித்தார்கள்.  பிகேஆரின்  ஐந்து  பிரதிநிதிகள் வாக்களிப்பில்  கலந்துகொள்ளவில்லை.