மகாதிர்: மலாய்மொழியை ஒதுக்கவில்லை, ஆனால் ஆங்கிலம் முக்கியம்

englishஅறிவியல்  துறைகளில்  நாடு  பின் தங்கி  விடாதிருக்க  அறிவியலிலும்  கணிதத்திலும்  ஆங்கிலப்  புலமை  பெற்றிருப்பது அவசியம்  என்கிறார் முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

“ஆங்கிலம்  முக்கியமான  அனைத்துலக  மொழியாகி  விட்டது. நம் அறிவின்  பெரும்பகுதி  ஆங்கிலம்  வழியேதான்  வருகிறது”  என்றாரவர். மகாதிர்  நேற்றிரவு  ஸ்கோலா  மெனாங்கா  சயின்ஸ்  மூவார்  முன்னாள்  மாணவர்  சங்கத்தின்  விருந்தில்  கலந்துகொண்டு  உரையாற்றினார்.

“அதற்காக   எனக்குத்   தேசிய உணர்வு  இல்லை  என்றோ  நான்  மலாய்மொழியை  ஒதுக்குவதாகவோ  அர்த்தமல்ல….ஆனால், இந்த  உண்மையை  நாம்  ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். இவ்விரண்டும்  நம்  வசப்பட  நாம்  ஆங்கிலத்தில்  புலமை  பெற்றிருப்பது  முக்கியம்”, என்றாரவர்.

அனைத்துலக  மொழியில்  புலமை  பெற்றிருப்பது  எதிர்காலத்தில்  நல்ல  வேலை  கிடைப்பதற்கும்  உத்தரவாதமாக  அமையும்.