அமானா: டிபிபிஏ மீது பொது வாக்கெடுப்பு தேவை

tppaஆசிய-பசிபிக்  பங்காளித்துவ  ஒப்பந்தத்தின்(டிபிஏஏ)  அமலாக்கம்மீது  மலேசியர்கள்  முடிவெடுப்பதற்காக  அரசாங்கம்  பொது  வாக்கெடுப்பு  நடத்த  வேண்டும்.

இதனைத்  தெரிவித்த  பார்டி  அமானா  நெகாரா(அமானா) இளைஞர்  பிரிவுத்  துணைத்  தலைவர்  பைஸ்  பாட்சில்  அந்த  வணிக  ஒப்பந்தத்தால்  ஏற்படக்கூடிய  நீண்டகால  பாதிப்புகளை  மக்கள்  அறிந்திருக்க  வேண்டும் என்றார்.

“குறிப்பாக  நாட்டின்  எதிர்காலம்.  டிபிபிஏ  அமலாக்கம்  கண்டால்  அது  பாதிப்படையும்.

“மக்கள்  ஒன்றுபட்டு  டிபிபிஏ-யை  நிராகரிக்க  வேண்டும்”, என்று  ஓர்  அறிக்கையில்  அவர்  கேட்டுக்கொண்டார்.

டிபிபிஏ-இன்  விளைவுகளை  அனுபவிக்கப்  போகின்றவர்கள்  மக்கள்தான்  என்பதால்  அது  தேவையா  வேண்டாமா  என்பதை  அவர்களே  பொது வாக்கெடுப்பின்  மூலம்  தீர்மானிக்க  வேண்டும்  என பைஸ்  குறிப்பிட்டார்.

1874ஆம்  ஆண்டு பங்கோர்  ஒப்பந்தத்தை  அவர்  நினைவூட்டினார்.

“அதே  போன்ற  செயல்படு  முறையின்கீழ்  மீண்டும்  அன்னியர்களுக்கு  அடிமைப்பட்டுக்  கிடக்க  மக்களுக்கு விருப்பமா?”, என்றவர்  வினவினார்.