மருந்துகளின் விலை ஏற்றம் காணும் என்பதை ஒபாமாவே ஒப்புக்கொண்டுள்ளதால், டிபிபிஎயை டிஎபி எதிர்க்கும்

 

limடிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தம் (டிபிபிஎ) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது டிஎபி அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களிக்கும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தம் குறித்து ஒரு முடிவான கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக கட்சி அதனைக் கவனமாக மதிப்பீடு செய்வதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டிருந்த அறிக்கை அந்த நிலைப்பாட்டை மாற்றி விட்டது என்றார் குவான் எங்.

டிபிபிஎ நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதத்தை தவிர அதற்கு வேறு வழி இல்லை என்றாரவர்.

6,000 பக்கங்களைக் கொண்ட டிபிபிஎ ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் மருந்துகளின் விலை ஏற்றத்திற்கு வகை செய்யும் என்று டிபிபிஎ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இதனை கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீது மலேசிய அரசாங்கம் வரி விதிப்பதில்லை.