எம்ஏசிசி ஜோ லவ்-வைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது

johஎஸ்ஆர்சி இண்டர்நேசனல்  சென், பெர்ஹாட்  மீதான  விசாரணையில்  உதவ  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி)  தொழில்  அதிபர்  லவ்  தெக்  ஜோ-வைத்  தொடர்பு  கொண்டிருப்பதாக  அரசாங்கம்  அறிவித்தது.

“எம்ஏசிசி  அதன்  விசாரணைக்கு  உதவியாக  ஜோவைச்  சந்தித்து   வாக்குமூலம்  பதிவு   செய்வதற்கு  ஒரு  நாளை  நிர்ணயம்  செய்ய அவரின் வழக்குரைஞர்களைத்  தொடர்பு  கொண்டுள்ளது.

“விசாரணை  நடந்து  வருவதால் அச்சந்திப்பு  பற்றி  விவரமளிக்க  இயலாது”,என  பிரதமர்  துறை  அமைச்சர்  பால்  லவ்  கூறினார்.

எம்ஏசிசி  அதன்  விசாரணைக்கு  உதவியாக  ஜோ  லவ்வைக்  கைது  செய்யுமா  என்று  ஜெவ்  ஊய்  கேட்டிருந்த  கேள்விக்கு  வழங்கிய  எழுத்து  வடிவ  பதிலில்  பால் லவ்  இவ்வாறு  கூறினார்.