மருந்து விலைகளில் டிபிபிஏ-இன் தாக்கம்மீது டிஏபி-இன் கவலை இன்னும் தீரவில்லை

medicineமருந்துகளின்  விலைகள்  போன்ற  விவகாரங்களுக்குச்  சரியான  விளக்கங்கள்  கூறப்படவில்லை  என்பதால்  பசிபிக்  வட்டார  பங்காளித்துவ ஒப்பந்த(டிபிபிஏ)த்துக்கு  எதிராக  கேள்வி  கேட்பதை  டிஏபி  நிறுத்தாது.

மருந்துகளின்  விலைகளில் டிபிபிஏ-ஆல்  ஏற்படக்கூடிய  தாக்கம்  என்னவென்பது  மலேசியர்களுக்கு  இன்னும்  தெரியாமலேயே  இருக்கிறது  என  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  இன்று  ஓர்  அறிக்கையில் கூறினார்.

“டிபிபிஏ-இன்  விளைவாக  ‘உயிரியல்’ மருத்துவ  பொருள்கள்  என்று  கூறப்படுவன  உள்பட  மருந்து  விலைகள்  உயருமா  என்ற  கேள்விக்கு  இன்னும்  விடை  கிடைக்கவில்லை.

“மனுக்குலத்தின்  எதிர்கால  நம்பிக்கை  என்று  போற்றப்படும்  உயிரியல்  மருந்து  பொருள்களுக்கு  வழங்கப்படும்  ஐந்திலிருந்து- எட்டாண்டுக்கால  பாதுகாப்பு  அதிகம்  என்று  தோன்றவில்லையா?”, என  லிம்  வினவினார்.

உரிமைப் பாதுகாப்பு  தவறாகப்  பயன்படுத்தப்படக்கூடிய   அபாயமும்  இருக்கிறது.  இதற்கும்  டிபிபிஏ-இல்  தீர்வுகூறப்படவில்லை  என  லிம்  கூறினார்.

“Turing Pharmaceuticals நிறுவனம்  எச்ஐவி  நோயாளிகளின்  உயிர்காக்கும்  மருந்தின் விலையை  ஒரே  நாளில்  5,000விழுக்காடு (யுஎஸ்$13.50-இலிருந்து $750 ஆக)  உயர்த்தியது  நமக்குத்  தெரியும்.

“இந்த  விலையேற்றம்  2015 ஆகஸ்ட்/ செப்டம்பரில்  ஒரு  முதலீட்டாளர்  அந்த  மருந்துக்கான  காப்புரிமை பாதுகாப்பைப்  பெற்றவுடன்  நிகழ்ந்தது”, என  பினாங்கு  முதலமைச்சருமான  லிம்  கூறினார்.