ஜாஹிட்: நஜிப்புக்கு எதிராக செயல்படும் சூத்திரதாரியை என்னால் ஊகிக்க முடிகிறது

masterபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிர்ப்பு  தெரிவித்து  அவரைப்  பதவி  விலகக்  கோரும்  34  அம்னோ  கிளைகளுக்குப்  பின்னே  இருந்து  கொண்டு  செயல்படுவது  யார்  என்பதைத்  தம்மால்  ஊகிக்க  முடிகிறது  என  அம்னோ  உதவித்  தலைவர்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார்.

34  கிளைகளுக்குப்  பின்னணியில்  ஒரு  சூத்திரதாரி  இருப்பதை  உணர  முடிவதாக  துணைப்  பிரதமருமான  அவர்  குறிப்பிட்டார்.

“மூத்த தலைவர்  என்ற  முறையில்  தம்மால்  சூத்திரதாரி  யார்  என்பதை ‘உணர’  முடிகிறது”. மலேசிய- சீன  உயர்  அதிகாரிகளின்  சந்திப்புக்குப்  பின்னர்  செய்தியாளர்களைச்  சந்தித்தபோது  ஜாஹிட்  இவ்வாறு  கூறினார்.

அவர்களால்  நஜிப்பை  எதுவும்  செய்ய  இயலாது. அந்த  34 கிளைகளும்  நாடு  முழுவதுமுள்ள  21,000  கிளைகளைப்  பிரதிநிதிக்கவில்லை  என்றாரவர்.

சூத்திரதாரி குறை சொல்வதற்கு  அம்னோ  கிளைகளைப்  பயன்படுத்திக் கொள்வதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்.  குறைசொல்வதற்குக்  கட்சியில்  வழிமுறைகள்  உண்டு.  அவற்றைப் பயன்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என்று  ஜாஹிட்  கேட்டுக்கொண்டார்.