அமானா உறுப்பினர்கள்மீது பாஸ் கட்சியினரின் ‘ஐஎஸ்-பாணி’ போர்

rawaபாஸ்  கட்சியின் உறுப்பினர்கள்  மற்றும் ஆதரவாளர்களின்  “தீவிரவாத  செயல்க”ளுக்குத்  தம்  கட்சியினர்  பலியாகி  வருவதாக  பார்டி  அமானா  நெகாரா(அமானா)  உதவித்  தலைவர்  முஜாஹிட்  யூசுப்  ராவா  கூறினார்.

இஸ்மாலிய  தீவிரவாத  அமைப்பான  ஐஎஸ்  போன்று  அவர்கள்  நடந்து  கொள்வதாக  அவர்  குற்றம்  சாட்டினார்.

அமானா  உறுப்பினர்கள்  நாள்தோறும்  முகநூலில்  அசிங்கப்படுத்தப்படுகிறார்கள்  என  நாடாளுமன்றத்தில்  செய்தியாளரகளிடம்  யூசுப்  ராவா  தெரிவித்தார்.

பாஸ்  கட்சியினரும்  தொண்டர்களும்  அமானா  உறுப்பினர்களின்  வீடுகளுக்கு  நேரில்  சென்று  அவர்களை  “சமய  நம்பிக்கை  அற்றவரக்ள்  என்றும்  கபடதாரிகள்  என்றும்” திட்டிய  சம்பவங்களும்  நிகழ்ந்துள்ளனவாம்

பாஸை  விட்டு  விலகிய  அமானா  தலைவர்கள்  அவர்களின்  வாழ்க்கைத்  துணைகளை  மணவிலக்கு  செய்ய  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.

“இதைத்  தடுத்து  நிறுத்தாவிட்டால்  இந்தச்  சித்தாந்தம்  ஐஎஸ்-பாணி  சிந்தனைக்கு  வழிகோலும்”, என்றவர்  எச்சரித்தார்.