சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட பிரதமர் நஜிப்புக்கு எதிராகத் தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வரைவு குற்றப் பத்திரிக்கையில் கொலை செய்யப்பட்ட அரசு வழக்குரைஞர் அந்தோனி கெவின் மொரெஸ் பெயரின் முதல் எழுத்துகள் இருந்தன என்று அவரது சகோதரர் கூறிக்கொண்டார்.
ஜூலை 30 இல் வலைத்தளத்தில் அந்த குற்றப் பத்திரிக்கையை பார்த்த போது அதில் தமது சகோதருடைய பெயரின் முதல் எழுத்துகளை அடையாளம் கண்டதாக சார்ல்ஸ் சுரேஷ் மொரெஸ் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தில் கூறியிருக்கிறார்.
அந்த இரு பக்க குற்றப் பத்திரிக்கையை மீண்டும் ஒரு முறை பார்த்த போது அதில் ஒரு பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெயரின் முதல் எழுத்து இடப்பட்டிருந்தது. அதை மீண்டும் விபரமாகப் படித்த போது அத்திருத்தத்திற்கு அடுத்து எழுதப்பட்டிருந்த பெயரின் முதல் எழுத்து தமது சகோதரர் கெவினுடையதாகும் என்று கூறிய சார்ல்ஸ், தமக்கு தமது சகோதரரின் கையொப்பமும் பெயரின் முதல் எழுத்துகளும் நன்கு தெரியும் என்று சத்தியப் பிரமாணத்தில் கூறியுள்ளார்.
சார்ல்ஸ் இன்று கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவரது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்ட போது அவரது வழக்குரைஞர் அமெரிக் சிதுவும் உடனிருந்தார்.
சட்டத்துறை தலைவர் முகமட் அபாண்டி அலி இதற்கு முன்னதாக வரைவு குற்றப் பத்திரிக்கை என்று கூறப்படுவதை போலியானது என்று நிராகரித்துள்ளார்.
இன்று இந்த சத்தியப் பிரமாணம் குறித்து தெரிந்து கொள்வதற்காக தொடர்பு கொண்ட போது, “நான் வெளிநாட்டில் இருக்கிறேன், நன்றி” என்று முகமட் அபாண்டி கூறினார்.
தாம் தமது சகோதரர் கெவினுடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததாக கூறிய சார்ல்ஸ், கடந்த செப்டெம்பரில் கெவின் கொலை செய்யப்படுவதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு நஜிப் மற்றும் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சூர் சம்பந்தப்பட்ட விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக கெவின் தம்மிடம் கூறியதாக தெரிவித்தார்.
பின்னர், தாம் ரியுகாசல்-பிரவுனை சந்தித்து இந்த குற்றப் பத்திரிக்கை பற்றி வினவியதாகவும் அந்த ஆவணம் “[email protected]” என்ற மின்னஞ்சல் வழி பெறப்பட்டதாக தெரிந்து கொண்டதாக சார்ல்ஸ் அவரது சத்தியப் பிரமாணத்தில் கூறியுள்ளார்.
அந்த மின்னஞ்சல் கெவினிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று உறுதியாக நம்புவதாக சார்ல்ஸ் தெரிவித்தார்.
“ஜிப்பி” என்ற பெயர் தம்மையும் கெவினையும் கவனித்துக் கொண்ட ஆயாளை குறிப்பிடுகிறது என்று சார்ல்ஸ் மேலும் கூறினார்.
கெவின் நேரடியாக சட்டத்துறை தலைவரின் கீழ் பணியாற்றியதால் அந்த வரைவு குற்றப் பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல் அவருக்கும் தெரிந்திருக்கும் என்றார் சார்ல்ஸ்.
எவ்வளவு மூடுமந்திரம் போட முடியுமோ அவ்வளவையும் போட்டு விட்டு ஒன்றுமே தெரியாத அப்பிராணி போல இருப்பவரும் அவருக்கு உடைந்தையாக செயல்படும் அரசாங்க அதிகாரிகளை நாடு கொண்டுள்ளது, அதர்மம் தலை விரித்தாடுகின்றது என்பதை மெய்பிக்கின்றது. ஆரம்பத்திலேயே எம் ஆழ்மனதில் ஏற்பட்ட சந்தேகம் இப்பொழுது வலுக்கின்றது. மேலும் கெவின் இறந்ததிர்க்கான காரணம் தெரியவில்லை என்ற அறிக்கையுடன் அவரின் இறப்புப் பத்திரம் வெளியாக்கப் பட்ட பொழுதே அவரைச் சார்ந்தோரிடம் இருந்து கேள்வி எழுப்பப்பட்டது! ஒருவர் இறந்த காரணம் தெரியவில்லையானால் அவர் கொல்லப்பட்டார் என்பதை எங்கனம் நீதிமன்றத்தில் நிருபிக்க முடியும்? இதனை அவர் குடும்பத்தாருக்கு விளக்கிய நண்பர்கள், மீண்டும் ஒரு முறை தனியார் சவ பரிசோதனை தேவை என்பதை ஏன் முன் நிறுத்தினர் என்பது இப்பொழுது தெளிவாகின்றது. இது மீண்டும் ஓர் அல்தந்துயா ஆவிக் கதையை நினைவுப்படுத்துகின்றது. மக்கா! உங்களுக்கு நரகம் காத்துக் கொண்டிருக்கின்றது.
எனக்கு நெஞ்சம் கனக்கிறது……….
பெரிய இடத்திலே கை வைப்பதற்கு முன் நம்ம பாக் கிரௌண்ட் சரியா இருக்கான்னு பார்த்துக்குனோம்.இடம் பொருள் ஏவல்ன்னு அப்போவே சொல்லி வச்சிட்டாங்க…..
அடுத்த முறை இந்த மாதிரி வீர தீர சகாப்தங்களை செய்ய நினைச்ச ஆரம்பத்திலே இருந்து twitter acc ஒன்றை ஆரம்பித்து மறைமுகமாக செய்திகளை TOR உதவியோடு அப்டேட் பண்ணிகிட்டே வாங்க…
MH17 தாக்கப்பட்ட அந்த நொடியே யுக்ரைன் ATC இல் பணிபுரிந்த ஒரு ஸ்பானிஷ் அதிகாரி அவர் twitter இல் ராடார் இமேஜ் யை வெளியிட்டார்.அது உலக மக்கள் பார்வையை விரைவாக ஈர்த்தது.இன்றுவரை அமெரிக்க அதற்கு பதில் அளிக்க முடியவில்லை! அதே போல MH370 ராடாரில் இருந்து மறைந்த நிமிடமே RMAF அறியும், அவர்கள் வாயும் மூடப்பட்டது! குறைந்தது உங்கள் நடவடிக்கைகளின் ஆதாரமாவது மிஞ்சும்….
ஒரு டாக்டர் க்கு தெரியாத கொலைக்கு என்ன தண்டனை லஞ்சம் வாங்கினால் என்ன தண்டனை என்று .மலேசியா பொலெஹ் !
இந்த நாடு அதர்மத்தில் தானே ஓடிகொண்டிருக்கிறது– என்ன இப்போது அது எல்லையை தாண்டி அதல பாதாளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது– இன்னும் பல காலத்திற்கு ஓடிக்கொண்டிருக்கும். என்றைக்கு இங்கு உண்மையிலேயே இனத்துவேசம் இல்லையோ அன்றுதான் இந் நாடு விடியும். பெரும்பாலான பூமி புத்ரா அட்டைகள் இப்போது இருக்கும் பாராபட்ச ஆட்சி இருக்கும் வரை எல்லாவற்றையும் கஷ்டமில்லாமல் உட்கார்ந்து கொண்டு அனுபவிக்க முடியுமே– இல்லாவிடில் ?
கெவின் ‘பிரதமர் மற்றும் அவரது துணைவியார் ‘ பற்றிய விசாரணையில் ஈடுபட்டிருந்தார் என்று கூறி, அல்தாந்துயா கொலை விசாரணையில் தனியார் துப்பறிவாளரான பாலா-வின் மரணமும் சந்தேகத்துக்குரியதுபோல் நினவு படுத்தி விட்டீர்கள்.