பாஸ் கட்சியுடன் ஒத்துழைக்கும் தமது கடப்பாட்டை பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இன்று பாஸ், அமனா மற்றும் டிஎபி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் முன்னிலையில் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பிகேஆரின் இளைஞர் மற்றும் மாதர் காங்கிரஸ்சில் உரையாற்றிய அவர், பிகேஆர் மட்டுமே இதர கட்சிகள் அனைத்தையும் கூட்டாக செயல்பட வைக்க முடியும் என்றார்.
ஒரே மேடையிலிருந்து அம்னோ-பிஎன்னுடன் போராடுவதற்கு டிஎபி, அமனா மற்றும் பாஸ் ஆகிய கட்சிகளின் வலிமையை வெற்றிகரமாக பிகேஆர் ஒன்றுபடுத்தியது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக அஸ்மின் கூறினார்.
அக்கூட்டத்தில் டிஎபி இளைஞர் தலைவர் வோங் கா வோ, அமனா இளைஞர் தலைவர் சானி ஹம்சா மற்றும் பாஸ் இளைஞர் உதவித் தலைவர் கைருல் நிஸாம் கைருடின் ஆகியோரும் இருந்தனர்.
மக்களின் உரிமைகளுக்காக போராட பிகேஆர், பிஎஸ்எம் போன்ற எதிரணிகளுடனும் சாபா மற்றும் சரவாக அரசியல் கட்சிகளுடனும் இணைந்து உழைக்கும் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது என்று சிலாங்கூர் மந்திரி புசாருமான அஸ்மின் அலி மேலும் கூறினார்.
ஒன்று மட்டும் அப்படமாகத் தெரிகின்றது. தே.மு. கட்சிக்கு எதிரான ஒரு நிரந்திர கூட்டணி உருவாகாது. சீனர்கள் எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் செய்பவர்கள். ஆதலால் இம்முறை சிலாங்கூர் மீண்டும் தே. மு. – இடம் திரும்பிச் செல்லும். அண்டாலாசும் அவ்வாறே. காப்பாரும் அவ்வாறே. இன்னும் பல்லின மக்கள் கலந்த தொகுதிகளும் இப்படியே. இது அஸ்மினுக்குத் தகுந்த பாடமாக அமையும். ஆழம் தெரியாமல் காலை விடும் அஸ்மினுக்கு அலை வெள்ளம் காத்திருக்கு.
ஒற்றுமை இல்லாத மாலுமிகள் நிறைந்த கப்பல் கரை சேராது என்பது வரலாறு காட்டிய பாடம். இப்படி ஒருமுகக் கொள்கை இல்லாத கூட்டணிக் கட்சிகளை நம்பி நட்டாற்றில் இறங்குவதை விட, உன்னை விட்டால் வேறு யாரும் இல்லை என்று தே.மு. – க்கு மக்கள் திரும்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஏன் சின்ன சின்ன தலைகளை ஒன்று கூட வைத்து ஏதோ உலக மகா அதிசயத்தைச் சாற்றி விட்டதாகப் புகழாரம். எங்கே பெரிய தலைகள்? ஒன்றாக உட்கார முடியாத, பேச முடியாத கூட்டணி எப்படி இந்நாட்டு மக்களை கரை ஏற்ற முடியும்? இது இதர மாநிலத்தில் நடக்குமா? கனவுலகத்தில் நின்று கொண்டு கப்பலை விட்டால் கனவு களைந்தவுடன் கப்பல் மாயமாய்ப் போய்விடும். நஜிப் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். நிலா கட்சியுடன் கூட்டுறவு என்று மக்களுக்குக் காட்டிக் கொண்டு, தேர்தலில் நிலா கட்சியுடன் கூட்டணி வைக்காமல் போட்டியிட்டால் போதும். எதிரணி மண்ணைக் கவ்வும்.
தேனீ என்ன சொல்ல வருது? அஸ்மின் முடிந்த வரை எல்லோரையும் ஒரு கட்டுக்குள் வைத்திருப்பேன் என்கிறார். அதனை சரி என்கிறதா, இல்லை என்கிறதா?தேனீ முதலில் பொதுப்படையாக சாடிவிட்டு, இரண்டாவது கருத்தில் நிலாவுடன் நஜிப் கூட்டணி வைத்தால் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஆபத்து என்கிறது. ஆக தேனீயின் இரண்டாவது கருத்தைத்தான் அஸ்மினும் சொல்கிறார். நிலாவை தனியே விட்டு விட்டால் அவர்கள் நஜிப்புடன் இணையும் சாத்தியம் உண்டு, ஆக அனைவரையும் ஒன்றுப்படுத்தி இணைந்து அடுத்த தேர்தலை எதிர் நோக்க வேண்டும் என்கிறார். அதற்கு தேனீக்கு ஏன் சலிப்பு?
தேனீயின் கருத்து 50% கசப்பான உண்மை. அஸ்மினின் முயற்சி பாராட்டத் தக்கது. பக்கத்தானை உடைக்க பாஸ் கட்சியிலும், டி.எ.பி.யிலும் இருப்பதைப் போன்று பி.கே.ஆறில் குறைவாக உள்ளது நல்ல விஷயமே. இன்னும் ஒரு முறை [PRU 14] நாட்டை பாரிசான் வெல்லுமேயானால் மக்கள் நரகத்திற்கு செல்லவேண்டியதில்லை. நாடே நரகமாகிவிடும். புதிதாக உருவாகியுள்ள PAP கட்சியையும், PSM கட்சியையும் பாக்கத்தான் ஹரப்பானில் இணைத்துக்கொள்ளும் திட்டத்தையும் அஸ்மின் முயலவேண்டும்.
“முடிந்த வரையில்” என்றால் என்ன அர்த்தம்? எங்கள் சித்தாந்த வகுப்பு ஆசிரியர் இந்த “முடிந்த வரையில்” என்பதே ஒரு தகாத வார்த்தை என்று அடிக்கடி நினைவுறுத்துவார். ஒருவனுக்கு ஒரு நெருப்புக் குச்சியை உடைத்து போடுவதுதான் முடிந்த தகுதி என்றால் அது எதையும் செய்யாததர்க்குச் சமமே. அப்புறம் அவனை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க முடியாது. இப்படி உடைந்த கண்ணாடியை ஒட்டி வைக்கின்றேன் என்றால் அது மீண்டும் சுலபமாக உடைந்து விடும். இந்த முயற்சியில் ஈடுபடுவதை விட்டுட்டு ‘Pakatan Harapan’ -ஐ வலுப்படுத்துவதில் இறங்கினால் நல்லது என்று சொல்ல வந்தேன். தன் கட்சி மலாய்க்காரர்கள் அதிகமாக ஓட்டுரிரிமையைக் கொண்டிருக்கும் தொகுதியில் தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் நிலா கட்சியுடன் ஒட்டுறவு வைத்துக் கொள்ள விரும்புகின்றது அரை நிலா கட்சி. இதற்கு அக்கட்சியின் முழு ஆதரவு இல்லாமால் அஸ்மின் மட்டும் தனித்து செயல்படுகின்றார். ஆனால் அந்த நிலா கட்சி சிலாங்கூர் முதலமைச்சர் நியமனத்திலும், ஹுடுத் சட்ட செயலிலும் அமீநோவின் கூட்டணியாக செயல்பட்டதில் அஸ்மினுக்கு கவலை இல்லை காரணம் அதன் இறுதி பயனாளி அவர்தான். கண்மூடித்தனமாக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போருக்கும் கவலை இல்லை காரணம் இவர்கள் அன்றன்றைய நிலையைத்தான் முன்னெடுத்துப் பார்கின்றார்கள். ஒற்றுமை இல்லாத கூட்டணி இருந்தென்ன? இறந்தென்ன?
நிலா கட்சி அமீநோவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு, ‘Pakatan Harapan’ எல்லாத் தொகுதிகளிலும் வலுவுடன் இறங்கினால் வெற்றி ‘Pakatan Harapan’ – குத்தான் காரணம் அமீனோ கட்சியின் இன்றைய நிலை, அரசியல் விவரமறிந்த மலாயக்காரரே காறித் துப்பும் அளவிற்கு உள்ளது. இப்படிப்பட்ட ஒரு கட்சியுடன் நிலா கட்சி ஒருகாலும் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்காது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ தொங்கும் சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற நிலை ஏற்பட்டால் இந்த நிலா கட்சி அந்த அமீனோ கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் என்பதை திண்ணமாக நம்பலாம். அப்பொழுது இந்த நிலா கட்சி அஸ்மின் பேச்சை கேட்குமா?. இப்பொழுதே அஸ்மினுக்கு அந்த நிலா கட்சியின் செயல்பாட்டில் எவ்வொரு மதிப்பும் இல்லை என்பதால் இனி வரும் காலத்திலும் அவ்வாறே. அதனால் அஸ்மின் ‘Pakatan Rakyat’ யை கை விட்டுட்டு ‘Pakatan Harapan’ -னை கை பற்றினால் உண்டு விடிவுகாலம். இல்லையேல் இருண்டகாலம் தொடரும். மேலும் ‘Pakatan Rakyat’ – ல் மூன்று கட்சிகளுக்கு மட்டுமே கூட்டணிக்கு இடமுண்டு என்ற நிலை மாறி ‘Pakatan Harapan’ – ல் பல கட்சிகள் இணைந்து மாபெரும் கூட்டணியாக செயல்பட எல்லா வழிபாடுகளும் உண்டு. அஸ்மின் சுயநலத்தை விட்டிட்டு மக்களின் பொது நலத்தை முன் வைத்தால் உண்டு நல்வாழ்வு மலேசிய மக்களுக்கு.
அரசியல்வாதிகளை ஒரேடியாக நம்ப வேண்டாம். தேர்தல் வரும் போது கூட்டு சேர்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் பூட்டை உடைப்பார்கள்! நம்மைப் பொருத்தவரை நம் தொகுதியில் நிற்பவன் நமது சமுதாயத்திற்கு நல்லது செய்வானா என்று தெரிந்து, தெளிந்து அவனுக்கு ஓட்டுப் போட்டால் போதும்! அரசியல் கபோதிகளுக்காக நாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம்!
azmi nee மட்டும் ஒத்து உலை தமிழனும் சீனனும் பின் வாங்கிக்கிறோம் okvaa ? WE மலாய், இந்தியன் AND CHINESe HATE PAS AND UMNO BN