டிசம்பர் 8-இல் தொடங்கும் அம்னோ பொதுப் பேரவையில் நடப்புத் துணைத் தலைவர் முகைதின் யாசின் அமருமிடத்தில் மாற்றம் ஏதும் இருக்காது.
வழக்கம்போல் அவர் தலைவரின் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பார் எனத் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“இருக்கை ஏற்பாட்டில் மாற்றம் இருக்கும் என நினைக்கவில்லை. துணைத் தலைவர் கட்சித் தலைவருக்குப் பக்கத்தில்தான் அமர்ந்திருக்க வேண்டும். துணைத் தலைவருக்குப் பக்கத்தில் உதவித் தலைவர்கள் அமர்ந்திருப்பார்கள்”, என ஜாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுவே கட்சி மரபு. இம்மரபை எல்லாக் கட்சிகளுமே மதிக்க வேண்டும் என்றாரவர்.
………….ஆடிபோயிட்டான் போல ஜவாக்கரனும் I MDB நாயகனும்