இந்தோனியாவின் பத்தாம் தீவிலிருந்து சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த பயணப் படகு கடலில் மூழ்கியபோது அதிலிருந்து ஏறத்தாழ 100பேர் காப்பாற்றப்பட்டனர். அப்படகு கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளுடன் மோதியதால் மூழ்கியதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணப் படகுச் சேவையை நடத்தும் பத்தாம்பாஸ்ட் நிறுவனம் வேறு இரண்டு பயணப் படகுகளை அழைத்து வந்து 90 பயணிகளையும் 7 பணியாளர்களையும் மீட்டதாக சிங்கப்பூர் கடலோர, துறைமுக நிர்வாகம் ஓர் அறிக்கையில் கூறியது.
இச்சம்பவம் நேற்றிரவு 9.45க்கு நடந்துள்ளது.
spore done good job…..hands up