பிளஸ் நிறுவனம் வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையிலும் அதன் பராமரிப்பில் உள்ள மற்ற நெடுஞ்சாலைகளிலும் 2016-இல் 5 விழுக்காடு சாலைக்கட்டணத்தை உயர்த்த உரிமை பெற்றுள்ளது. ஒப்பந்தப்படி ஒப்பந்த காலம் 2038-இல் முடிவடையும் வரையில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சாலைக் கட்டணத்தை மறுபரிசீலனை செய்யும் உரிமை அதற்கு உண்டு.
இன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு வழங்கிய எழுத்துவடிவ பதிலில் பொதுப்பணி துணை அமைச்சர் ரோஸ்னா அப்துல் ரஷிட் இதனைத் தெரிவித்தார்.
“2011-இல், செய்து கொள்ளப்பட்ட துணை ஒப்பந்தமொன்றில் பிளஸ் நிறுவனமும் அரசாங்கமும் பிளஸின் பராமரிப்பில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளிலும் 2011-இலிருந்து 2015வரை சாலைக்கட்டணத்தை உயர்த்துவதில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.
“அதன்படி பிளஸ் அதன் அடுத்த கட்டண உயர்வை பினாங்கு பாலம் தவிர்த்து மற்ற நெடுஞ்சாலைகளில் 2016-இலிருந்து அமல்படுத்தலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 5விழுக்காடு கட்டண உயர்வுக்கு ஒப்பந்தம் இடமளிக்கிறது”, என்றாரவர்.
கட்டண உயர்வு மட்டும் தெரிகிறது.தின வார மாத டோல் வசூல் எங்கே போகிறது? டோல் கட்டண உயர்வு அவசியம் ஏன்? மக்களை சுமைக்கு மேல் சுமையாகுவது உங்கள்ளுக்கு சந்தோசம்தானே.டோல் உயர்வு உங்களுக்கு கொண்டாட்டம்.
நசிப்பும் ரோச்மஹ்வும் LAGI KAYALAH BAGUS TUNGGU ELECTION
கையொப்பமிட்ட ஒப்பந்தம் மக்களின் பார்வைக்கு எட்டாத கனியோ???