கொடுக்கப்பட்ட அனுமதிகளை மீறிய 1எம்டிபிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் பேங்க் நெகாரா கவர்னர் ஸெட்டி அக்தார் அசீஸ்.
“ஏற்கனவே கூறியதுபோல் எங்களின் விசாரணை முடிந்து நடவடிக்கை எடுப்பதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டுள்ளது”, என ஸெட்டி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அது பற்றி மேலும் விவரிக்க அவர் மறுத்தார்.
“அது முடியும் வரையில் அதைப் பற்றிப் பேச முடியாது”, என்றாரவர்.
பேங்க் நெகாரா முன்பு 1953 நாணய மாற்றுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் 1எம்டிபிமீது விசாரணை மேற்கொண்டிருந்தது.
சிறிதளவு முன்னேற்றம் உண்டு என்று சொல்லியே பதவி ஓய்வு பெற்று சென்று விடுவீர் போலிருக்கிறதே!!! நல்ல திறமை கொண்ட குடும்பத்திலிருந்து வந்த நீங்கள் நன்மதிப்புடன் பதவி ஓய்வு பெறுவதே பெருமை!!! நடக்குமா??? உண்மையும் நேர்மையும் நிலை கொள்ளுமா???
என்ன முன்னெற்றம் ?மூடி மறைப்பதில் லா ல லா ?